Saturday, October 19, 2013

குறளின் குரல் - 549

குறளின் குரல் - 549

19th Oct 2013

வானோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன்

கோல்நோக்கி வாழுங் குடி.

                         (குறள் 542: செங்கோன்மை அதிகாரம்)

Transliteration:

vAnOkki vAzhum ulagellAm mannavan

kOlnOkki vAzhung kuDi

vAnOkki – Expecting the benevolent rains from the skies

vAzhum – live

ulagellAm – all lives on earth

mannavan – like wise, a ruler's

kOlnOkki – expecting rule of unbent scepter (just)

vAzhung – live

kuDi – the citizens

In the chapter on "Glory of Skies (Rains)", a verse, "nIrindru amaiyAdu ulagu enin yAr yArkkum vAninRu amaiyAdu ozukku" said, without water there is no life or world, and without the skies that act with such benevolence, there is no order in this world either. Going along with the same thought, here in this chapter he says, "All lives in this world depend on rains from skies; likewise only depending on unbent scepter that renders just without partiality, live the citizens.

A poem from nAnmaNikaDigai again expresses the same with words, " kOl nOkki vAzhum kuDiyellAm – tAi mulaiyin pAl nOkki vAzhum kuzhavigaL – vAnath thuLi nOkki vAzhum ulagam".

"Lives on earth look up to skies for rains for life

So do the citizens at rulers, for life without strife"

தமிழிலே:

வானோக்கி - வானத்திலிருந்து பொழியும் மழையை எதிர் நோக்கி, அதன் கொடையால்

வாழும் - வாழ்கின்றன

உலகெல்லாம் - உலகத்து உயிர்களெல்லாம்

மன்னவன் - ஆள்கின்றவருடைய

கோல்நோக்கி - செங்கோல் கோணாத ஆட்சியை எதிர் நோக்கி

வாழுங் - வாழ்கின்றனர்

குடி - குடிமக்கள் எல்லோரும்.

வான்சிறப்பு அதிகாரத்தில், "நீரின்று  அமையாது  உலகுஎனின் யார் யார்க்கும் வானின்று அமையாது ஒழுக்கு" என்ற குறளில் நீர் இல்லாமல் உலகம் இல்லை என்றும், அத்தகைய நீரை வாரி வழங்கும் வான்கொடை இல்லையெனில், உலகின் கண் ஒழுங்கு முறைகள் குலைந்துவிடும் என்று சொன்னார் வள்ளுவர். அக்கருத்தை ஒட்டியே இவ்வதிகாரத்திலும் இக்குறளில் சொல்லுகிறார். வானத்து மழையை நம்பி உலகத்து உயிர்களெல்லாம் இருக்கின்றன, வாழ்கின்றன. அதேபோல ஆளுவோருடைய வளையாத செங்கோலை நம்பியே குடிமக்கள் எல்லோரும் வாழ்கின்றனர் என்பதே இக்குறளின் கருத்து.

இக்கருத்தையொத்த நான்மணிக்கடிகைப் பாடலொன்று, " கோல் நோக்கி வாழும் குடியெல்லாம் தாய் முலையின் பால் நோக்கி வாழும் குழவிகள் - வானத் துளி நோக்கி வாழும் உலகம்", என்கிறது. உயிர் வாழ மழை எவ்வளவு தேவையோ, குடிமக்கள் ஒழுங்கும் கட்டுப்பாடுடனும் வாழ, ஆளுவோர் தம்முடைய நீதி குலையாத, செங்கோல் வளையாத ஆட்சியைத் தரவேண்டும்.

இன்றெனது குறள்:

மழைவழி பார்த்திவ் வுலகுவாழும் செங்கோல்

பிழையாக்கோன் பார்க்கும் குடி

mazhaivazhi pArthiv ulaguvAzhum sengOl

pizhaiyAkkOn pArkkum kuDi

shared via

No comments:

Post a Comment

Popular Posts