இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ளக்கூடாது: வைகோ பேட்டி Common wealth conference India not participate Vaiko
திருப்பத்தூர், அக். 24–
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் மருது பாண்டியர்கள் நினைவு தினத்தையொட்டி இன்று அவர்களது நினைவு மண்டபத்தில் உள்ள மருதுபாண்டியர்களின் சிலைகளுக்கு ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ மாலை அணிவித்தார்.
பின்னர் வைகோ நிருபர்களிடம் கூறியதாவது:–
இமயம் முதல் குமரி வரை ஆங்கிலேயர்களுக்கு எதிராக வீரவாளை உயர்த்தியவர்களில் தென் மாவட்டங்களில் பாஞ்சாலங்குறிச்சியில் வீரபாண்டிய கட்டபொம்மன், சிவகங்கையில் வேலு நாச்சியார். இவரிடம் சேனாதிபதியாக இருந்து மன்னராக உயர்ந்தவர்கள் இந்த மருதுபாண்டியர்கள். திருப்பத்தூரில் மட்டும் 570 பேர் தூக்கிலிடப்பட்டனர். அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்துவது ஒவ்வொரு தமிழனின் கடமை ஆகும்.
மத்திய அரசு இலங்கைக்கு பல கோடி ரூபாயை அளித்து தமிழர்களுக்கு துரோகம் செய்து விட்டது. அங்கு போர் நடக்க இந்தியாதான் காரணம். காங்கிரஸ் கூண்டில் ஏற்ற வேண்டிய குற்றவாளி. இலங்கையில் சமீபத்தில் நடந்த தேர்தல் கண் துடைப்பு தான்.
இலங்கையில் காமன் வெல்த் மாநாடு நடப்பது என்பது காங்கிரசின் கூட்டு சதி. காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ளக்கூடாது. இலங்கையில் காமன்வெல்த் மாநாட்டை நடத்தக்கூடாது.
இவ்வாறு அவர் கூறினார்.
...
shared via
No comments:
Post a Comment