நடிகை சினேகா பிறந்தநாள்
by veni
Tamil news, Tamil culture, செய்திகள் ...Today,
நடிகை சினேகா இன்று தனது பிறந்த நாளை கொண்டாடினார். தமிழ் திரையுலகில் கே.ஆர்.விஜயாவுக்கு பிறகு சிரிப்பழகி என வர்ணிக்கப்பட்டவர் சினேகா. 2000–த்தில் 'என்னவளே' படத்தில் அறிமுகமானார். பம்மல் கே.சம்பந்தம் படத்தில் கமலுடன் இணைந்து நடித்தார். 'பார்த்திபன் கனவு' படத்தில் சிறந்த நடிகைகான விருது பெற்றார்.
கமலுடன் ஜோடி சேர்ந்த வசூல் ராஜா எம்.பி.பி.எஸ் படம் முன்னணி நடிகை அந்தஸ்தை கொடுத்தது. ஆட்டோகிரப் படத்தில் நல்ல தோழியாக வந்தார். இப்படத்தில் அவர் பாடிய 'ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே வாழ்வென்றால் போராடும் போர்க்களமே' பாட்டு தேசிய விருதை பெற்றது.
'அது' என்ற பேய் படத்தில் பயம் காட்டினார். புதுப்பேட்டை படத்தில் விலைமாது வேடத்தில் வந்தார். பவானி ஐ.பி.எஸ். படத்தில் விஜயசாந்தியாக ஆக்ஷன் செய்தார். தற்போது பண்ணையாரும் பத்மினியும், உன் சமையல் அறையில், விடியல் போன்ற படங்கள் கைவசம் உள்ளன. அச்சமுண்டு அச்சமுண்டு படத்தில் நடித்த போது பிரசன்னாவுடன் காதல் வயப்பட்டார். இருவரும் திருமணம் செய்து கொண்டனர். அதன் பிறகும் தொடர்ந்து நடித்து வருகிறார்.
The post நடிகை சினேகா பிறந்தநாள் appeared first on ekuruvi is a tamil news Portal offering online tamil news.
Show commentsOpen link
No comments:
Post a Comment