Friday, August 9, 2013

என் வழி தனி வழி ( இது நிரா வழி ) - ஸ்ரீதர்

ஸ்ரீதர் (1933 - அக்டோபர் 20, 2008) - தமிழ் சினிமாவின் இணையற்ற இயக்குனர்களில் மிகவும் முக்கியமானவர்.இயக்கத்திலும்,வச
னத்திலும் தனக்கென தனி முத்திரை பதித்த சினிமா மாமேதை.தமிழ் சினிமா மட்டுமல்லாது கன்னடம்,தெலுங்கு,ஹிந்தி என வேரூன்றி கிளை பரப்பி வெற்றி கண்டவர்.

வசனங்களால் நிறைந்த சினிமாவை காட்சிகளாய் வளர்த்து விருட்சமாக்கியவர்.காட்சிகளிலும்,காமிராக் கோணங்களும் கதை சொல்ல ஆரம்பித்தது இவர் காலத்திற்கு பின்தான்.

ரவிச்சந்திரன், காஞ்சனா (காதலிக்க நேரமில்லை),ஜெயலலிதா,நிர்மலா, மூர்த்தி,ஸ்ரீகாந்த் (வெண்ணிற ஆடை),முத்துராமன்,கல்யான் குமார்,குட்டி பத்மினி(நெஞ்சில் ஓர் ஆலயம்)போன்ற புகழ்பெற்ற சினிமா சாம்ராஜ்யங்களை உருவாக்கிய பெருமை ஸ்ரீதரையே சாரும்.


அதுவரை சின்ன சின்ன வேடங்களில் நடித்து வந்த நாகேசை "நெஞ்சில் ஓர் ஆலயம்" படத்தின் மூலம் மாபெரும் நடிகனாக்கிய மகானும் ஸ்ரீதர்தான்.

புகழ்பெற்ற பாடகர் ஏ.எம். ராஜாவை "கல்யாணப்பரிசு" , எஸ்.பி.பி யை "துடிக்கும் கரங்கள்" படத்தின் மூலம் இசையமைபாளராக்கிய பெருமை இவருக்கே உண்டு.

நடிகை சுபாசினி,ஹிந்தியில் புகழ்பெற்ற நடன இயக்குனராக விளங்கும் சின்னி பிரகாஷ்(அழகே உன்னை ஆராதிக்கிறேன்),ஜெமினி கணேசன் மகள் ஜிஜி (நினைவெல்லாம் நித்யா) படங்களின் மூலம் அறிமுகம் செய்தவர்.

இவர் முகம் சரியில்லை என்று ஒதுக்கிய நடிகை பின்னாளில் ஹிந்தி சினிமாவை கலக்கிய ஹேமாமாலினி.

ஏ.எம். ராஜா,எம்.எஸ்.வி போன்ற புகழ்பெற்ற இசையமைப்பாளர்களுடன் பணியாற்றிய ஸ்ரீதர் "அழகே உன்னை ஆராதிக்கிறேன்" படத்தின் மூலம் இளையராஜாவுடன் இணைந்தார்.அதன் பின் பகிரங்கமாக தான் ஒரு இளையராஜா ரசிகன் எனவும் அறிவித்தார்..இது அக்காலத்தில் பெரிய சர்ச்சையை கிளப்பியது குறிப்பிடத்தக்கது.அப்படி சொன்னவர் பிற்காலத்தில் நான் திரும்பவும் படம் செய்தால் ஏ.ஆர்.ரஹ்மானுடன் இணைய வேண்டுமென்றார்.இப்படி காலத்துக்கும்,சினிமா வளர்ச்சிக்கும்,மக்கள் ரசனைக்கும் ஏற்ப தன்னை மேம்படுத்திக் கொண்டவர்.

நடிகர் அர்ஜுன் சமீபத்தில் அளித்த பேட்டியில் தான் நடித்த படங்களிலேயே ஸ்ரீதர் இயக்கிய "குளிகால மேகங்கள்" தான் தனக்கு பிடித்த படமென்று சொன்னதும் குறிப்பிடத்தக்கது.

இந்த மாபெரும் கலை மேதையின் கடைசி காலத்தில் உதவியாளராக பணியாற்றியவர் தான் இயக்குனர் பி.வாசு.

தற்போது சினிமாவின் இணையற்ற நடிப்பு சிகரமாக விளங்கும் சீயான் விக்ரமை "தந்துவிட்டேன் என்னை" என்ற படத்தின் மூலம் அறிமுகப்படுத்தியதும் ஸ்ரீதர் தான்.

எண்ணிலடங்கா அறிமுகம் செய்து சினிமா சிறக்க உழைத்தவர்.
இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம் இவர் பெருமையை..இவர் வாழ்ந்த காலத்தில் நாமும் வாழ்ந்திருக்கிறோம் என்பதில் சினிமாவும் சினிமா ரசிகனும் பெருமைப்பட்டே தீர வேண்டும்.

No comments:

Post a Comment

Popular Posts