கொஞ்ச
நாளாவது வாழ்க்கையை அனுவிப்போமே!
போதுமென்ற மனம் என்பதுதான் மனித வாழ்வில்
சென்றடைய முடியாத எல்லை.
போதுமென்ற
மனமே ஒருவர் எளிமையான
வாழ்க்கை வாழ்கின்றாரா இல்லையா என்பதற்கான
சான்று.
சும்மா வாழ்க்கையை ஆட்டோ பைலட்டில்
போட்டுவிட்டு என்ன வாழ்க்கை வாழ்கிறோம்
என்று சலித்துக்கொள்வதைவிட,
ஆட்டோபைலட்டிலிர
ுந்து மாற்றி நம்கைக்கு கொண்டு வந்து வாழ்ந்து
நாம் எடுத்த பிறவியை வாழ்ந்து முடித்தோம்
என்றிருக்கும்.
எனக்கு ஒரு பெரிய கார் வேண்டும், என் மகன்
டாக்டராகணும், எனக்குப் புரொமோஷன்
வேணும், எனக்கு ஒரு லவ்வர் வேண்டும்
என்று எதிர்காலத்தைப்
பற்றியே கவலைப்பட்டுத் திரியாமல்
இன்று ஓட்டும் பைக்கை ரசித்து ஓட்டியும்,
ஆசை மகனுடன் நீண்ட நேரம் விளையாடியும்/
ஊரைச் சுற்றிக் காண்பித்தும், பார்க்கும்
வேலையை ரசித்து சிறப்பாகச் செய்தும்,
தன்னை விரும்பும் தாய் & தந்தை & அண்ணன்
& தம்பி உறவை பலப்படுத்தியும் வாழ்வதுதான்
எளிமையாய் வாழ்வது.
ஏக்கத்துடனேயே திரிவது எளிமையான
வாழ்க்கை இல்லை.
உணவு, உடை, வீடு என்பவை மனிதன் உயிர்
வாழ்வதற்கு அத்தியாவசியத் தேவை.
அதேபோல் சம்பாத்தியத்திற்கு ஒரு வேலையும்
முக்கியம் என்றாலும், இவை எல்லாவற்றிலும்
எது குறைந்தபட்சம், எது அதிகபட்சம்,
நமக்கு எது நமக்கு சரி என்பதைத்
தீர்மானிப்பதில்தான் எளிமை இருக்கிறது.
எவ்வளவு பிசியாக இருக்கிறீர்கள் என்பதல்ல
முக்கியம்! எதில் பிசியாக இருக்கிறீர்கள்
என்பதுதான் மிக முக்கியம்.
எளிமையான வாழ்க்கை வாழவேண்டும் என்றால்
நம்முடைய நேரத்தை நாம் சரிவர
பயன்படுத்தவேண்டும். முடியாத
வேலைகளை இழுத்துப்
போட்டுக்கொண்டு செய்கிறேன்
பேர்வழி என்று தொடர்ந்து ஆபீஸையே கட்டிக்க
வாழ்க்கைக்கு முதல் எதிரி.
என்றைக்கெல்லாம்
ஒன்பது மணிக்கு ஆபீஸில் நுழைந்த நீங்கள்
இரவு ஏழு மணிக்கு மேல் அலுவலகத்தில்
இருக்கிறீர்களோ அன்றைக்கெல்லாம் எதற்காக
இப்படி இருக்கிறோம் என்று சற்று சிந்தியுங்கள்.
வீட்டில் சிறு தோட்டம் போடவேண்டும்
என்று ஆசை!
அதற்கு நேரமே இல்லை என்று சொல்பவர்கள்
எதற்காக புதிது புதிதாய்
வேலைகளை ஏற்றுக்கொள்கின்றனர்?
எதிர்காலத்தில் முன்னேற உதவும்
என்று நினைத்துக்கொண்டு சனி, ஞாயிறுகளில்
மட்டுமே நடக்கும் புதிது புதிதான
வகுப்புகளில் சேர்ந்துகொண்டு பின்னர் ஏன்
அலுத்துக்கொள்கின்றனர்?.
அது எப்படி சாத்தியம்! வாழ்க்கையில் முன்னேற
வேண்டாமா? பணம் சம்பாதிக்க வேண்டாமா?
தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டாமா?
என்று கேட்பவர்களுக்கு நிறைய வேலை செய்ய
வேண்டாம் என்று நினைத்தீர்கள் என்றால்
செலவைச் சுருக்கிக்கொள்ளுங்கள்.
செலவு குறைந்தால் நிறையப் பணம்
தேவைப்படாது! வேலையும் குறையும்.
உங்களுக்குப் பிடித்த விஷயத்தைச் செய்ய
நேரமும் கிடைக்கும். கொஞ்சம் வாழவும்
செய்யலாம்
No comments:
Post a Comment