Monday, August 5, 2013

தமிழுக்கு அழிவில்லை

தமிழால் இணைவோம்:
உலகை என் காலடியில் பணிய வைப்பேன் என்ற எழுச்சியோடு படை நடத்திச் சென்று ஆசியாவின் முக்கிய பகுதிகளை வென்ற மகா அலெக்சாந்தர் 2300 ஆண்டுகட்கு முன்பு பேசிய கிரேக்க மொழி, இன்று திரிந்து விட்டது.

வரலாற்றின் போக்கையே மாற்றி அமைத்த அன்பரசர் ஏசுநாதர் 2000 ஆண்டுகட்கு முன்பு தம் கருத்துகளை போதித்த அரமிக் மொழி (ஹுப்ரூ மொழியின் கிளை மொழி) இன்று வழக்கிழந்து விட்டது.

ஆனால், இந்தப் பழம்பெரும் மொழிகள் வாழ்ந்து சிறந்த காலத்தில் தானும் வளமாக வாழ்ந்து, இன்று தன் பழைய தோழமை மொழிகள் அனைத்தும் மாண்டு போன போதும், நீண்ட மனித வரலாற்றின் பார்வையாளனாக, இன்றும் இளமையோடு வாழும் ஓரே மொழி நம் தமிழ் மொழி மட்டுமே.

ஆனால், இந்த வளம் கொழிக்கும் தமிழ் மொழியின் சொந்தக்காரர்கள், தமிழ் மொழியைப் பேசத் தயங்குவது ஏன்?

கடவுளுக்கு அழிவில்லை என்று சொல்வார்கள்....
நான் சொல்கிறேன்....
என் தமிழுக்கு அழிவில்லை.....
தமிழில் பேசத் தயங்குவதால் தமிழுக்கு எந்த இழப்பும் இல்லை....

-Venkadesh Venki

No comments:

Post a Comment

Popular Posts