தமிழால் இணைவோம்:
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அலுவலக பணி நிமித்தம் நியூஜெர்சிக்கு சென்றிருந்தேன். புறப்படும்போதே எனது மகள் சென்னைக்கு திரும்பி வரும்போது மேஜிக் ஸ்டிக் வாங்கி வரவேண்டுமென்று சொல்லி சொல்லி அனுப்பியிருந்தாள். அப்படியென்றால் என்னவென்று கூட கேட்காமல் அவசரத்தில் வீட்டிலிருந்து மீனம்பாக்கம் ஏர்போர்ட் கிளம்பி விட்டேன்.

கடந்த மாதம் எனது மகளுக்கு பிறந்தநாள். எனது மச்சான் பர்த்டே கிப்ட்டாக முதுகில் கட்டும் பட்டர்பிளை டிரெசுடன், தலையில் வைக்கும் கிரீடம் பிறகு கையில் வைத்துக் கொள்ளும் மேஜிக் ஸ்டிக் ஒன்று வாங்கி வந்தான். அப்போதுதான் எனக்கு தெரிந்தது. இதுதான் மேஜிக் ஸ்டிக்கா என்று. அடச்சே.. ஒரு சின்ன குச்சியில் ப்ளோரசன்ட் நிறத்தில் கலர் கலராக பேப்பர் ஒட்டியிருந்தது. மேஜிக் செய்றவங்க தலையில் நீண்ட தொப்பியுடன் ஆம்ரக்கா ஆப்ரக்கா என்று சொல்லி கையில் இருக்கும் ஒரு குச்சியை சுழற்றுவார்களே. அதேதான். இதுதான் மேஜிக் ஸ்டிக்கா அடச்சே. இது தெரியாமல் போச்சே எனக்கு. ஆமாம். இதுல எப்படி மேஜிக் செஞ்சு மனிதர்கள் மறைவார்கள் என்று யோசித்தேன். எனது மகள் கண்ணை மூடி மேஜிக் ஸ்டிக்கை சுழற்ற எதிரே இருந்த நான் எங்காவது ஓடி போய் ஒளிந்துக்கொள்ள வேண்டுமாம். அதான் மேஜிக்காம். இது நல்ல உட்டலாக்கடி வேலையாயில்ல இருக்கு என்று நினைத்துக்கொண்டு இதை எங்க வாங்கினீங்க என்று மச்சானிடம் கேட்டேன். தாம்பரம் வரவழில எங்கேயோ சிங்கபெருமாள் கோவில்கிட்ட கடையில வாங்கினேன் என்று சொன்னான்.
அடச்சே இது தெரியாம போச்சே என்று வருத்தமாக இருந்தது. இப்படித்தான் சின்ன சின்ன சந்தோஷங்கள் சல்லிசான விலையில நமது வீட்டு பக்கத்திலேயே கிடைக்கின்றன என்று நினைத்துக்கொண்டேன்.
நன்றி - Vinayaga Murugan
No comments:
Post a Comment