Tuesday, August 27, 2013

ராஜ்கிரண் Rajkiran

தமிழால் இணைவோம்:
16வயதினிலே படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவுக்கு வந்த சூழ்நிலையில் படத்தை பார்த்த விநியோகஸ்தர்கள் யாரும் படத்தை வாங்க விரும்பவில்லை.

"விளையாட்டுப் பையன் மாதிரி நடிச்சிக்கிட்டு இருந்த கமலஹாசனை இப்படி கோவணம் கட்டி, வெத்தல பாக்கு போட வச்சிட்டாங்க,அப்புறம் எப்படி படம் ஓடும்" என்பது தான் அவர்கள் சொன்ன காரணம்.

அப்படி இருந்தும் ஒரு விநியோகஸ்தர், மிகப்பெரிய "NSC" (வடக்கு, தெற்கு ஆற்காடு, செங்கல்பட்டு) ஏரியாவை வாங்க முன் வந்துள்ளார்.ஆச்சர்யம் தாங்க முடியாத பாரதிராஜா," நெசமாத்தான் வாங்கப்போறீங்களா? நெசமாவே உங்களுக்கு படம் பிடிச்சிருக்கா?" என்று கேட்டுள்ளார்.

"ஒரு அடிப்படையான கருத்தைச் சொல்லியிருக்கீங்க. ஆளப் பாக்காதே. ஆடையப் பாக்காதே.மனசப் பாரு அப்படின்னு. கிராமத்துலயிருந்து பட்டணம் வரைக்கும் எல்லாருக்கும் தேவையான ஒரு கருத்து இது.எல்லா ஜனங்களுடைய மனசுக்கும் தெரிஞ்ச விஷயம். அதனால இந்தக் கருத்து ஜெயிக்கும்.எனக்கு நம்பிக்கையிருக்கு" என்று அந்த விநியோகஸ்தர் பதிலளித்துள்ளார்.


அந்த விநியோகஸ்தர் வேறு யாருமில்லை. அப்போது காதர் மொய்தீன் என்ற பெயரில் இருந்து - தற்போது ராஜ் கிரணாக மாறியுள்ள நடிகர் " ராஜ்கிரண்"தான்.

நன்றி : டி.சி.டி.வி

Visit our Page -► தமிழால் இணைவோம்

No comments:

Post a Comment

Popular Posts