Saturday, July 6, 2013

ஒரு சாதனை இந்திய விவசாயியின் வேதனை குரல்

ஒரு சாதனை இந்திய விவசாயியின்
வேதனை குரல்...
"பொதுவா ஒரு மூட்டை விதைய
போட்டா இருவத்தஞ்சி இல்லைனா முப்பது மூட்
ஆனால்
இயற்கை விவசாயத்தினை முறைப்படி செய்தால்
90 மூட்டை வரை எடுக்கலாம்...
நான் எடுத்து இருக்கேன்... அதற்காக அரசிடம்
இருந்து பட்டமும் வாங்கி இருக்கேன்... அமெரிக்க
சனாதிபதி என்னுடைய
தோட்டத்துக்கு வந்து பார்த்துட்டு பாராட்டிட்டு
ஆனா இவ்வளவு நடந்தும் நம்முடைய
அரசு இத மக்கள்கிட்ட கொண்டு போக
மாட்டேங்குது... காரணம் இதக்
கொண்டு போனா பூச்சிக் கொல்லி நிறுவனங்க,
உர நிறுவனங்க எல்லாம் அடிப்பட்டுப்
போகும்...வெளிநாட்டுக்
காரனுக்கு காசு கிடைக்காது...அதனால இத
மக்கள் கிட்ட கொண்டு போக மாட்டேங்கிறாங்க...
நான் விவசாயிங்க என்னால விவசாயம் தான்
பண்ண முடியும்... அதுல ஆராய்ச்சி பண்ண
முடியும்... நீங்க தான கணினி, இணையம்
அப்படி இப்படின்னு பல பேர்கிட்ட பேசுறீங்க...
நீங்க இந்த செய்திய எல்லாம் மக்கள் கிட்ட
பரப்பலாமே...செத்து போன மனுசனுக்குத் தான்
உசுரக் கொடுக்க முடியாது... ஆனா செத்துப்
போன மண்ணுக்கு உசுரக் கொடுக்க முடியும்...
இளைஞர்கள் முன்னாடி வந்தா நிச்சயம் நம்ம
மண்ணுக்கு உயிர் கொடுக்கலாம்."
அவர் பெயர் நாக இரத்தின நாயுடு ( http://
www.srinaidu.com/profile.htm )... அவரின்
தோட்டத்தினைப்
பற்றி ஒரு இணையமே ஆரம்பித்து இருக்கின்றார்
http://www.srinaidu.com/
தேவைபட்டால் தயங்காமல் பேசுங்கள்
தமிழிலேயே பேசுவார்.

No comments:

Post a Comment

Popular Posts