Friday, July 19, 2013

கவிஞர் தாமரையின் கோபம்

கவிஞர் தாமரையின் கோபம் நியாயம் தானே!!

காங்கிரஸே.....!
எத்தனை கொடுமைகள்
செய்துவிட்டாய்
எங்கள் தமிழினத்திற்கு...

எத்தனை
வழிகளில் கெஞ்சியும் கூத்தாடியும்
காலில் விழுந்தும் கதறியும்
கொளுத்திக் கொண்டு செத்தும்
தீர்ந்தாயிற்று...

எதுவுமே காதில் விழாத உங்களுக்கு
இன்னும் தராத ஒன்று மிச்சம் உண்டு என்னிடம்....

அழுது வீங்கிய கண்களோடும்
அரற்றிய துக்கத்தோடும்
களைந்த கூந்தலோடும்
வயிரெரிந்து இதோ விடுகிறேன்..

கண்ணகி மண்ணில் இருந்து
ஒரு கருஞ்சாபம்!
உங்கள் சிம்மாசனம் வெடித்துத்
தூள் தூளாகட்டும்!!..


கவிஞர் தாமரை.

No comments:

Post a Comment

Popular Posts