Friday, July 26, 2013

பணம் மட்டுமா வாழ்க்கை ? எத்தனை பேர் இப்படி வாழமுடியும் ?

குருவிகளின் சத்தம் கேட்டு காலை பொழுதில்
கண் விழித்ததுண்டா?

கம்மாக்கரை தண்ணீரில்கால் நனைத்ததுண்டா?

காத்தாட வரப்பின் மேல் நடந்ததுண்டா?
முட்டி முட்டி பால் குடிக்கும்
கன்று குட்டியை ரசித்ததுண்டா?

கொய்யாவை கொத்தி திண்னும்
அணிலை ரசித்ததுண்டா?

மாலையில் மலரும்
மல்லிகையை முகர்ந்ததுண்டா?

இரட்டை மாட்டு வண்டியின்
சலங்கை சத்தத்திற்கு தாளம் போட்டதுண்டா?
நடவு நடும் அக்காக்களின்
எசப்பாட்டு கேட்டதுண்டா?

ஏர் பிடிக்கும் அண்னண்களின் பின்னால்நடந்தது
ண்டா?

கொட்டும் மழையில் குடையில்லாமல்
நனைந்ததுண்டா?
மண் வாசனையில் தண்னிலை மறந்ததுண்டா?

வாசலில் ஓடும் மழை நீரில் காகித கப்பலும்
கத்திக் கப்பலும் விட்டதுண்டா?

பாசமாய் வளர்த்த ஆட்டுக்
குட்டி அடிபட்டபோது அதற்காக அழுததுண்டா?

ஆலம் விழுதில் ஊஞ்சல் ஆடியதுண்டா?

அரச இலையில் பீப்பி செய்து ஊதியதுண்டா?

பாலைப்பூ காத்தாடி தெரியுமா?

சப்பாத்திகள்ளி பழம் திண்னதுண்டா?

கம்மஞ்சோற்றின் வாசம்தெரியுமா?

அம்மா அடிக்க கை ஓங்கும் போது ஓடிப்போய்
தாத்தாவின்வேட்டிக்குள்ளும ் பாட்டியின்
முந்தானைக்குள்ள ும் ஒளிந்ததுண்டா?
அக்கா, அண்ணனோடு விளையாடும்
போது வேண்டும் என்றே தோற்று நம்
வெற்றியை கொண்டாடும்
பாசத்தை அனுபவித்ததுண்டா ?

அத்தைமார்களின் மாமன்மார்களின்
சீண்டல்களால் சினுங்கியதுண்டா ?

ஊர் பேர் தெரியாத
வழிபோக்கனுக்கு உணவிட்டு அவன் பசியாறிய
முகம் கண்டு மகிழ்ந்ததுண்டா?

பாட்டியின் மடியில் படுத்து பழங்கதைகள்
கேட்டதுண்டா?

தாத்தாவின் மீசையை முறுக்கியதுண்டா ?

இரவில் நிலவின் ஒளியில்
உருண்டை சோறு திண்னதுண்டா?

இவற்றையெல்லாம் அனுபவிப்பேயானால ் நீ
ஆசீர்வதிக்கப்பட ்டவன்.....
இல்லையனில் ரத்தமும் சதையுமான
உணர்வற்ற, பணத்திற்காக நடமாடும்எந்திரம்
கோட்டும் சூட்டும்
போட்டுகொண்டு குளிக்காமல் சென்ட்
அடித்துக்கொண்டு பணம்சம்பதிப்பது
மட்டுமே மகிழ்ச்சியான வழ்க்கைஇல்லை
அதையும் தாண்டி நாம் கண்டுகொள்ளாமல்
விட்டஉறவுகளும் உணர்வுகளும்
காத்துக்கொண்டிர ுக்கிறது நம் அன்பிற்காக...
பழமையில் தான் பசுமை இருக்கிறது
பாசம் கனக்கும் உறவும் இருக்கிறது....

No comments:

Post a Comment

Popular Posts