தழிழரின் ஓலம்
தமிழர்களின் பிறப்பிடமே இலங்கை தான்
இன்று இலங்கை யிலிருந்து தமிழர்கள் எவ்வாறு விரட்டி அழிக்கப்பட்டர்களோ இதே நிலைமை
இன்னும் 50 ஆண்டுகளில் தமிழர்கள் தமிழ் நாட்டை விட்டு விரட்டி அடிக்கப்படுவார்கள்
by luxshan tharmalingam
சிரிப்பு Archives | Tamilsway
தமிழர்களால் ஈழம் அல்லது இலங்கை என்றழைக்கபடும் இந்துசமுத்திரத்தின் நித்திலம் என்று வர்ணிக்கபடும் அழகிய தீவு எம் தேசம் ஆனால் இப்போது வந்தேறு குடிகளாக தொக்கி நிற்கும் பெளத்த சிங்க இனவாதத்தின் பெயராம் சிறீலங்கா
எம் தாய் பூமியில் கிட்டதட்ட 10,000 ஆண்டுகளுக்கு முன்பே மனித நாகரீகம் ஆரம்பித்துவிட்டது அப்போது இயக்கர், நாகர், வேடர் என்ற பழங்குடிகள் தொல்திராவிடமொழி அல்லது எலி என்ற பண்டைய தழிழ்மொழியின் வடிவத்தை பயன்படுத்தினர்.
கி.மு-05ம் நூற்றாண்டு:- இக்காலப்பகுதியில் தழிழ் பெயர்களைக்கொண்ட மூன்று அரசுகளான நாகதீவு, தம்பபன்னி,களனி ஆகியவை அரியணையில் இருக்கின்றன. இந் நிலையில் பலர் வட இந்தியாவில் இருந்து ஈழத்தில் குடியேற ஆரம்பிக்கின்றனர். இந்த காலப்பகுதியிலேயே பெளத்த சிங்களத்தின் ஆரம்பகுடியேறியான விஐயனும் அவனது 700 தோழர்களும் எம் தாயகபூமிமீது காலடிவைப்பதாக பெளத்த சிங்களத்தை பிரதிபலிக்கும் நூலான மகாவம்சம் கூறுகிறது.
பழங்குடிமக்களின் அரசனின் மகளான குவேனியை இந்தவந்தேறு குடிகளின் தலைவனாம் விஐயன் மணம்புரிந்து பின் அவளது தந்தையை, விஐயனும் அவனது தோழர்களும் கொலைசெய்து ஆட்சியை கைப்பற்றுகிறனர் பின் குவேனியையும் துரத்திவிடுகின்றனர் அதேவேளை அவர்களுக்கு தேவையான இளவரசிகளையும் பணியாளர்களையும் வட இந்தியாவிலிருந்து அழைத்து வருகின்றனர் இவர்களின் வழித்தோன்றல்களாகவே இன்றைய சிங்கள இனவாத சமூகம் தொக்கி நிற்பதாக பெளத்தசிங்கள நூலான மகாவம்சம் குறிப்பிடுகின்றது.
கி.மு 3ம் நூற்றாண்டு:- மெளரிக பேரரசன் அசோகன் கலிங்கத்துகு எதிராக போர்தொடுக்கிறான் இப் போர் பலயிழப்புகளை ஏற்படுத்தினாலும் அசோகணே இப் போரை வெற்றிகொள்கிறான் ஆனால் இவ் இரத்தவெறிபிடித்த போரும் அதன் உயிரிழப்புகளும் அவனை கவலையில் ஆழ்த்தவே அன்பையும் தர்மத்தையும் போதித்த பெளத்தத்தை தழுவி அதனை பரப்புரை செய்யதொடங்குகிறான்.
இந் நிலையில் அசோகமன்னனின் தூதுவரான மகிந்ததேரர் இலங்கைக்கு வருகிறார் அப்போது இலங்கை அநூராதபுரத்தை ஆட்சி செய்துவந்த தேவ நம்பியதீசன் பெளத்தத்தை ஏற்றுகொள்கிறான் இவ்வாறே எம் ஈழத்தில் பெளத்தம் பரவ ஆரம்பிக்கிறது.
சிவ வழிபாடும் சிறு தெய்வவழிபாடும் செறிந்து காணப்பட்ட ஈழத்தில் பெளத்தம் எழுச்சிகொள்கிறது மன்னன் எவ்வழியோ குடிகளும் அவ் வ்ழியே என்றகோட்பாட்டுக்குகிண்ங்க பெளத்தத்திற்கான செல்வாக்கு அல்லது கரிசனை அதிகரிக்க ஆரம்பித்தது இதை அறிந்த அசோகன் இலங்கையின் வளர்ச்சிக்காக பல துறை நிபுணர்களையும் வேலையாட்களையும் அணுப்பிவைக்கிறான்.
தழிழனான எல்லாளனது அரசாட்சி அநுராதபுரத்தில் மிகவும் சிறப்புமிக்க காலமாக விளங்கிய ஓர் காலப்பகுதி சிவ வழிபாட்டில் அதீத நம்பிக்கை கொண்டவனான இவன் பெளத்தமதத்திற்கும் உரியமரியாதையை வழங்குகிறான் அதுமட்டுமன்றி எல்லோரையும் ஓர் நாட்டுமக்கள் என்ற தொனியில் ஆட்சிசெய்துவருகிறான் இதனால் இவனுக்கு எல்லா இன மக்கள்மத்தியில் நன்மதிப்புபெற்றவனாக 44 வருடங்கள் ஆட்சிபுரிந்தான் இக்காலப்பகுதியில் பல சிங்கள மன்னர்கள் இவனுக்கெதிராக படையெடுத்தும் தோல்வியையே தழுவி நின்றனர் இவ்வாறு 44 வருடங்கள் தொடர்ந்து ஆட்சிசெய்த எல்லாளனை தோற்கடிப்பதற்காக துட்டகாமினி என்ற சிங்கள இளைஞன் படைதிரட்டி வருகிறான் இருவருக்கிடையிலும் கடுமையான போர் நடக்கிறது போர் இழப்புகளை தவிர்கவிரும்பிய எல்லாளன் துட்டகாமினியை நாம் இருவரும் நேருக்கு நேர் போர் புரிவோம் என அழைக்கிறான்
இளைஞனான துட்டகாமினிக்கும் வயதான எல்லாளனுக்கும் கடும்போர் நிகழ்கிறது இலங்கையின் தென்பகுதியிலிருக்கும் றோகனப்பகுதியின் இளவரசனான துட்டகாமினி நடந்தசண்டையில் வெற்றிகொண்டு அநுராதபுர ஆட்சியை தழிழர் கையிலிருந்து எடுத்துகொள்கிறான்.
இந்த துட்டகாமினியை முன் நிறுத்தியே இலங்கை சிங்கள பெளத்த நுலான மகாவம்சத்தை மகா நாம தேரர் எழுதுகிறார்.
அன்று போன என் ஈழம் திரும்பவில்லை என்னும் ஆனால் அது திரும்பவேண்டும் எம்மினத்துக்கு
இது புலிகளின் தாகம் மட்டும் அல்ல…..
இது தமிழரின் ஓயாத தாகமாக………
என்றும் உள்ள தமிழீழம் என்ற தாகம்……..
ஓலம் தொடரும்………….
The post தழிழரின் ஓலம் appeared first on Tamilsway.
Show commentsOpen link
No comments:
Post a Comment