Wednesday, July 31, 2013

அழகு தமிழ்நாடு!

புதுக்கோட்டை (நார்த்தமலை சிவன் கோவில்)



இடம் : போடி மெட்டு



இடம் : சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே உள்ள அரளிப்பாறை!

  

இடம் : மறைக்காடு(வேதாரண்யம்), நாகை மாவட்டம்

  

இடம் : ஏலகிரி, வேலூர் மாவட்டம் 


பழவேற்காடு ஏரி



 மேட்டூர் அணை



 இடம் : கொடைக்கானல்


இடம் : உதகை
  

இடம் : மேகமலை, தேனி மாவட்டம் 

 

Saturday, July 27, 2013

இவங்கலாம் இன்னமும் இருக்காய்ங்கயா! ! சொன்னா நம்புங்க..

இவங்கலாம் இன்னமும் இருக்காய்ங்கயா! !
சொன்னா நம்புங்க..
===============
1) துப்பட்டாவின் நோக்கம் அறிந்துப்
போடற பொண்ணுங்க

2) சரக்க மோந்துப் பார்த்தாலே மயக்கம்
போடற பசங்க

3) கை முறுக்கு சுடத் தெரிந்தப்
பாட்டிங்க

4) எவ்ளோ பெரிய சிக்கு கோலத்தையும்
அசால்ட்டா போடற அம்மாக்கள

5)அப்பா ஏதாவது கேட்டா நின்று பொறும
பதில் சொல்ற பிள்ளைங்க

6)
ஒரே ஒரு மொபைல் ,ஒரே ஒரு சிம்கார்ட் ,
ஒரே ஒரு காதல் இருக்கிற
பொண்ணுங்க ,பசங்க

7) மல்லிகைப் பூவையும்
கண்ணாடி வளையலையும் நேசிக்கும்
பெண்கள்
பொண்ணுங்க கிட்ட பேச கூச்சப் படற பசங்க.
முறைப் பையன பார்த்தா வெட்கப்படற
பொண்ணுங்க.

9) மதிய உணவை ஒன்றாக அமர்ந்துச்
சாப்பிடும் குடும்பங்கள

10)சொந்த மண்ணையும் மொழியையும்
மறக்காத மனிதர்கள

என்ன!!இவங்கலாம் 100 ல 2% தான்
இருக்காங்க..

நன்றி - ஆதிரா

கருப்பு ராஜா - Black Raja

தமிழ் - Tamil:
#கஞ்சா #கருப்பு தனது சொந்த படப்பிடிப்புக்காக வாங்கிய போர்வெல் லாரி மூலம் கிராமங்களுக்கு இலவசமாக #ஆழ்குழாய் #கிணறு அமைத்துக்கொடுத்து கொண்டு இருக்கிறார்!!!

படத்திற்காக ரூ.20 லட்சம் செலவில் ஒரு புது போர்வெல் லாரியை கஞ்சா கருப்பு வாங்கி இருக்கிறாராம். படப்பிடிப்பு இல்லாத நேரங்களில் எந்த ஊரில் தண்ணீர் இல்லையோ அந்த ஊருக்கு லாரியை கொண்டு சென்று போர்வெல் போட்டுக் கொடுக்கிறாராம். இதுவரை 12 ஊர்களில் 50 போர்வெல் போட்டுக் கொடுத்திருக்கிறாராம்.

இன்னமும் போர்வெல் போடச்சொல்லி 100-க்கும் மேற்பட்ட மனுக்கள் கஞ்சா கருப்புவுக்கு வந்திருக்கிறதாம். ஆகையால், படப்பிடிப்பு முடிவதற்குள் எல்லா ஊர்களுக்கும் வந்து போர்வெல் போட்டுத் தருகிறேன் என சத்தியம் செய்திருக்கிறாராம் கஞ்சா கருப்பு.

# கருப்பு ராஜாவே! நீ கருப்பாக இருந்தாலும் உன் மனசு சொக்க தங்கம் யா , நல்லா இருயா, நோய்நொடி இலாத வாழ்வுடன் கூடிய நீண்ட ஆயுசோட ....!!!!

Friday, July 26, 2013

அகத்தியர்

தமிழ் - Tamil:
#குட்டை உருவமும், நீண்ட தாடியும் கொண்ட ஒரு சாமியாரும், ஒரு மண் குடுவையும் ஒரு சில ஆங்கில வார்த்தைகளும் உங்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கலாம்.
முதலில் யாரிந்த சாமியார் என்பதை தெரிவித்து விடுகிறோம். இவர் தாங்க "#அகத்தியர்". ஒரு சிலர் படத்தைப் பார்த்ததும் யூகித்திருப்பீர்கள்! சரி இவருக்கும் இந்த பதிவுக்கும் என்ன சம்மந்தம் என்பதைப் பார்க்கலாம்.

#தமிழர்கள் மற்றும் இந்தியர்களின் பழங்கால அறிவியல் தொழில் நுட்பத்தைப் பற்றி ஏற்கனவே ஒரு சில பதிவுகளை நாம் தந்திருந்தோம். சுமார் 9000 ஆண்டுகளுக்கு முன் இந்தியர்கள் கண்ட விமான #அறிவியல், #வானவியல் #சாஸ்திரம் என்ற வரிசையில் இப்போது சுமார் 4000 ஆண்டுகளுக்கு முன்னர் #தமிழன் அறிந்து வைத்திருந்து ஒரு அரிய தொழில் நுட்பத்தைப் பற்றி விவரிப்பது தான் இந்த பதிவு.

"சன்ஸ்தப்ய ம்ரின்மாய பத்ரே
தாம்ரப்பத்ரம் சுசான்ஸ்க்ரிதம்
சாட்யெச்சிகிக்ரிவன் சர்த்ரர்ப்ஹி
கஷ்த்பம்சுப்ஹி
தஸ்தலொஷ்தோ நிததவ்யாஹ்
பர்தச்சடிதஸ்த்ஹா
சன்யோகஜ்ய்தே தேஜோ
மித்ரவருனசங்கியதம்"

புரியலை நா விட்டுடுங்க..., நீங்கள் இப்போது படித்த வரிகள் #பைந்தமிழ் முனிவர் அகத்தியர் எழுதிய அகத்திய சம்கிதம் என்ற அறிவியல் பொக்கிடத்தின் ஒரு பகுதி.
இதற்கான விளக்கத்தை இப்போது பார்க்கலாம்,

"ஒரு மண் குடுவையை எடுத்து அதனுள்ளே தாமிர தகடை செலுத்தி சிறிதளவு சிகிக்ரிவம் நிறப்ப வேண்டும். பின்னே அதை ஈரமான மரத்தூள், பாதரசம் மற்றும் துத்தநாகத்தைக் கொண்டு பூசி, இரண்டு கம்பிகளை இணைத்தால் மித்ரவருனசக்தியைப் பெறலாம்"

மித்ரவருனசக்தியா அப்படினா என்ன? சித்தர்கள் தவமிருந்து கிடைக்கிற சக்தியா?

Rao Saheb Krishnaji Vajhe (சுருக்கமாய் கிருஷ்ணாஜி) 1891 ஆம் ஆண்டு புனேவில் தமது பொறியியல் படிப்பை முடித்துவிட்டு, தமது துறை சார்ந்த விடயங்களை பண்டைய கால படைப்புகளில் தேடலைத் தொடங்கினார். அப்போது உஜ்ஜெய்னி மாகாணத்தைச் சேர்ந்த Damodar Tryambak Joshi (சுருக்கமாய் ஜோஷி) ஜோஷியிடம் ஒரு சில பண்டைய ஆவனங்களைப் பெற்றுத் தனது ஆய்வுகளைத் தொடர்ந்தார். அது சுமார் கி.மு 1550 ஆம் ஆண்டின் ஆவணம். நாம் மேலே பார்த்த அந்த வரிகளைப் படித்த உடன் அதைப் பற்றி தெரிந்து கொள்ள சமஸ்கிருத வல்லுனரான Dr.M.C.Sahastrabuddhe (சுருக்கமாய் புத்தே) அவர்களை அணுகினார். புத்தே அப்போது நாக்புர் பல்கலைக்கழக சம்ஸ்கிருதத் துறைத் தலைவர். அவர் இதைப் படித்துப் பார்த்ததும் ஆச்சரியத்துடன் அதிர்ந்து போய் இது ஏதோ ஒரு டேனியல் செல்லைப் போன்ற மின்கலத்தின் கட்டுமானத்தைப் போன்று இருக்கிறது என்றார். சரி இதை மேலும் ஆராய வேண்டும் என்ற ஆர்வம் தொற்றிக் கொள்ள புத்தே அதை நாக்பூரைச் சேர்ந்த பொறியியல் வல்லுனர் P.P. Hole (ஹோல்) அவர்களிடம் அதைக் கொடுத்து ஆராயச் சொன்னார். இதைக் கேட்டதும் நமது கிருஷ்ணாஜிக்கு உற்சாகம் பீறிட்டு வர அவரும் களத்தில் குதித்தார்.

ஒவ்வொன்றாய் படித்து படித்து அதில் கூறப்பட்டதைப் போன்றே தனது மின்கலத்தை வடிவமைக்கும் போது அவர் வந்து முட்டி மோதி நின்ற இடம் சிகிக்ரிவம் என்ற சொல். நாமும் கூட அதை படிக்கையில் என்ன அது என்று சற்று யோசித்திருப்போம். அவர்களும் இது என்னவாய் இருக்கும் எனத் திணரும் போது ஒரு சமஸ்கிருத அகராதியில் "மயிலின் கழுத்துப் பகுதி" என்று இருந்ததைப் பார்த்தார்கள். உடனே அவர்கள் இருவரும் பக்ஹ் என்ற ஒரு மயில் சரணாலயத்தில் தலைமைப் பொருப்பாளராய் இருந்தவரிடம் போய் ஏதாவது இறந்த மயில்கள் உள்ளதா அல்லது இங்கிருக்கும் மயில்கள் எப்போது சாகும் என கேட்க அவருக்கு கோபமே வந்துவிட்டது. பிறகு இவ்விருவரும் நிலைமையை விளக்கிக் கூற உடனே பக்ஹ் சிரிக்க ஆரம்பித்துவிட்டார். இருவரும் திகைப்புடன் அவரை நோக்க பக்ஹ் சொன்னார் "அது மயிலின் கழுத்து அல்ல மயிலின் கழுத்தைப் போன்ற நிறம் உள்ள பொருள்". இதைக் கேட்டதும் அவர்களுக்கு சிந்தனை முளைத்தது. ஆஹா! ஆம்! அது தான் அது!, மயிலின் கழுத்து நிறம்! அதே தான். காப்பர் சல்ஃபேட்! கண்டுபிடித்தாகிவிட்டது.

அடுத்த சில மணி நேரங்களில் மின் கலமும் தயாரானது. அந்த மின் கலத்தை ஒரு மல்டி மீட்டரை வைத்து ஆராய்ந்த போது 1.38 Open Circuit Voltage மற்றும் 23 milliampere Short Circuit Current. கிடைக்கப்பெற்றது. ஆமாம்! வெள்ளைக்காரன் Electric current என்றதை அலுப்பே இல்லாம மின்சாரம் என்று பெயர் மாற்றி பயன்படுத்தி வருகிறோமே அதற்கு நம் பாட்டன் இட்ட பெயர் மித்ரவருண சக்தி.

இந்த மித்ரவருண சக்தி என்ற பெயருக்கும் கூட விளக்கமுண்டு. வருணன் என்றால் தண்ணீர் என்பது நாம் அறிந்ததே, மிதரன் என்றால் சூரியன் என்று பொருள். ஆனால் இங்கே ஹைட்ரஜன் என்ற பொருளைக் கொள்ளும். ஏனெனில் சூரியனின் சக்தி ஹைட்ரஜனில் தான் உள்ளது. அதனால் இங்கே ஹைட்ரஜனைக் குறிக்க மித்ரா என்று குறிப்பிடுகிறார். தண்ணீரில் இருந்து ஹைட்ரஜனைப் பிறித்து எடுத்தால் மாபெரும் சக்தியை நாம் பெறலாம். எனவே அவ்வாறு பெறப்பட்ட சக்தியையே மித்ரவருண சக்தி என்கிறார் அகத்தியர்.

என்னப்பா இது அந்த காலத்துல மின்சாரமா என்று கேட்கிறீர்களா? தேடுங்கள் கூகுள் தளத்தில், பாக்தாத் பேட்டரி என்று ஆங்கிலத்தில். அது மட்டும் அல்ல ஹிஸ்டரி சேனலின் "தி ஏன்ஸியண்ட் ஏலியன்ஸ்' தொட்ரைப் பார்த்தவர்களுக்கு இது தெரிந்திருக்கக் கூடும்.

அவர் மேலும் கூறுவது, இது போல 100 கலன்களை செய்து தண்ணீரைப் பயன்படுத்தினால் அது பிராண வாயுவாகவும் ஹைட்ரஜனாகவும் பிரியும் என்கிறார். இந்த ஹைட்ரஜன் மிதக்கும் தன்மையுடையது எனவும் இதை ஒரு பையில் அடைத்தால் பறக்கப் பயன்படுத்தலாம் எனவும் தெரிவிக்கிறார். அது மட்டுமல்லாமல் இதே அகஸ்திய சம்ஹிதாவில் நமது நவீன கால "electroplating" என்று சொல்லக் கூடிய அதே முறையை தெள்ளத் தெளிவாக விவரித்து செயற்கையாக தங்கத்திற்கு சாயம் பூசுவது எப்படி என்றும் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பு : அகத்தியர் வாழ்ந்த காலகட்டம் குறித்த தெளிவான புள்ளி விவரம் கிடைக்கப்பெறவில்லை. சுமார் 9000 ஆண்டுகளுக்கு முன் இருந்து 3500 ஆண்டுகளுக்கு முன் வரை வெவ்வேறு காலகட்டங்களில் அவர் வாழ்ந்ததைப் பற்றிய குறிப்புகள் உள்ளது. அதனால் இந்த அறிவியல் பொக்கிsaம் நிச்சயம் குறைந்தது 3500 முதல் 4000 ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு தமிழனால் கண்டுபிடிக்கப்பட்டது என்று கூறலாம்.

#Tamil #தமிழ் #தமிழர் #தமிழ்மொழி

பணம் மட்டுமா வாழ்க்கை ? எத்தனை பேர் இப்படி வாழமுடியும் ?

குருவிகளின் சத்தம் கேட்டு காலை பொழுதில்
கண் விழித்ததுண்டா?

கம்மாக்கரை தண்ணீரில்கால் நனைத்ததுண்டா?

காத்தாட வரப்பின் மேல் நடந்ததுண்டா?
முட்டி முட்டி பால் குடிக்கும்
கன்று குட்டியை ரசித்ததுண்டா?

கொய்யாவை கொத்தி திண்னும்
அணிலை ரசித்ததுண்டா?

மாலையில் மலரும்
மல்லிகையை முகர்ந்ததுண்டா?

இரட்டை மாட்டு வண்டியின்
சலங்கை சத்தத்திற்கு தாளம் போட்டதுண்டா?
நடவு நடும் அக்காக்களின்
எசப்பாட்டு கேட்டதுண்டா?

ஏர் பிடிக்கும் அண்னண்களின் பின்னால்நடந்தது
ண்டா?

கொட்டும் மழையில் குடையில்லாமல்
நனைந்ததுண்டா?
மண் வாசனையில் தண்னிலை மறந்ததுண்டா?

வாசலில் ஓடும் மழை நீரில் காகித கப்பலும்
கத்திக் கப்பலும் விட்டதுண்டா?

பாசமாய் வளர்த்த ஆட்டுக்
குட்டி அடிபட்டபோது அதற்காக அழுததுண்டா?

ஆலம் விழுதில் ஊஞ்சல் ஆடியதுண்டா?

அரச இலையில் பீப்பி செய்து ஊதியதுண்டா?

பாலைப்பூ காத்தாடி தெரியுமா?

சப்பாத்திகள்ளி பழம் திண்னதுண்டா?

கம்மஞ்சோற்றின் வாசம்தெரியுமா?

அம்மா அடிக்க கை ஓங்கும் போது ஓடிப்போய்
தாத்தாவின்வேட்டிக்குள்ளும ் பாட்டியின்
முந்தானைக்குள்ள ும் ஒளிந்ததுண்டா?
அக்கா, அண்ணனோடு விளையாடும்
போது வேண்டும் என்றே தோற்று நம்
வெற்றியை கொண்டாடும்
பாசத்தை அனுபவித்ததுண்டா ?

அத்தைமார்களின் மாமன்மார்களின்
சீண்டல்களால் சினுங்கியதுண்டா ?

ஊர் பேர் தெரியாத
வழிபோக்கனுக்கு உணவிட்டு அவன் பசியாறிய
முகம் கண்டு மகிழ்ந்ததுண்டா?

பாட்டியின் மடியில் படுத்து பழங்கதைகள்
கேட்டதுண்டா?

தாத்தாவின் மீசையை முறுக்கியதுண்டா ?

இரவில் நிலவின் ஒளியில்
உருண்டை சோறு திண்னதுண்டா?

இவற்றையெல்லாம் அனுபவிப்பேயானால ் நீ
ஆசீர்வதிக்கப்பட ்டவன்.....
இல்லையனில் ரத்தமும் சதையுமான
உணர்வற்ற, பணத்திற்காக நடமாடும்எந்திரம்
கோட்டும் சூட்டும்
போட்டுகொண்டு குளிக்காமல் சென்ட்
அடித்துக்கொண்டு பணம்சம்பதிப்பது
மட்டுமே மகிழ்ச்சியான வழ்க்கைஇல்லை
அதையும் தாண்டி நாம் கண்டுகொள்ளாமல்
விட்டஉறவுகளும் உணர்வுகளும்
காத்துக்கொண்டிர ுக்கிறது நம் அன்பிற்காக...
பழமையில் தான் பசுமை இருக்கிறது
பாசம் கனக்கும் உறவும் இருக்கிறது....

125 ஆண்டு வாழும் முதியவர் ரங்கசாமி கவுண்டர் மனைவி சடச்சியம்மாளுக்கு வயது 110

செஞ்சி அருகே ஜம்போதி என்ற கிராமம் உள்ளது. இந்த ஊரில் ரங்கசாமி கவுண்டர் என்ற முதியவர் வாழ்ந்து வருகிறார். அவருக்கு 125 வயது ஆவதாக கிராம மக்கள் கூறுகின்றனர். அவருடைய மனைவி பெயர் சடச்சியம்மாள். அவரும் உயிருடன் இருக்கிறார். அவருக்கு 110 வயது ஆகியிருப்பதாக சொல்கின்றனர்.
ஆனால் இதற்கான ஆதாரமான பிறப்பு சான்றிதழோ ஜாதகமோ எதுவும் இல்லை. ஆனால் 10 ஆண்டுகளுக்கு முன்பு ரேஷன் கார்டு

Wednesday, July 24, 2013

குற்றாலீசுவரன்

இந்த பெயர எங்கையோ படிச்சி இருக்கோம்னு தோனுதா?

நியாபகம் வந்திச்சா? இல்லையா அப்போம் படிங்க....






குற்றாலீசுவரன் (பிறப்பு: 8 நவம்பர், 1981) என்னும் குற்றால் இரமேசு இந்திய நீச்சல் வீரர். தமிழ்நாட்டில் பிறந்து வளர்ந்த இவர், மாரத்தான் என்னும் வகை நீச்சல் வீரர்.

தன்னுடைய 7-ம் அகவையில் இருந்து நீச்சல் போட்டியில் பங்குபெற்றும் வரும் இவர், ரிப்பன் மீட் என்ற மாவட்ட அளவிலான போட்டியில் முதன்முறையாக நீச்சலடித்தார். அப்போட்டியில் ஆராவது இடம் பிடித்தார். அதன்பிறகு பல மாவட்ட அளவிலான போட்டிகளிலும், மாநில அளவிலான போட்டிகளிலும் பங்குபெற்ற இவர், தன்னுடைய 10-வது அகவையில், 1991-ம் ஆண்டு நடைபெற்ற 5 கி.மீ. தூர நீச்சல் போட்டியில் கலந்துகொண்டு நான்காம் இடம் பிடித்தார்.

1994-ம் ஆண்டு, மிஹிர் சென்னுடைய ஒரே வருடத்தில் ஐந்து கால்வாய்களை நீச்சல் மூலம் கடந்த 30 வருட சாதனையை முறியடித்தார்.
இவர் முதன்முதலாக, இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையேயான பாக்கு நீரிணையை ஏப்ரல 1994-ம் ஆண்டு நீச்சலடித்து கடந்தார். அதன்பிறகு, தமிழக அரசின் உதவியுடன் 1994-ம் ஆண்டு ஆகஸ்ட் 15-ம் திகதி ஆங்கிலக் கால்வாயைக் கடந்தார்.
ஆறு கால்வாய்களை நீச்சல் மூலம் நீந்தி கடந்தமைக்காக கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்றார்.

இவரைப் பற்றிய ஒரு பாடம் தமிழ்நாட்டின் பாடபுத்தகத்திலும் இருந்தது. இப்போம் நியாபகம் வருதா எங்க படிச்சோம்ன்னு???

சாதனை புரிந்த பிறகு, இவர் உலகம் முழுவதுமுள்ள பல்வேறு போட்டிகளில் பங்குபெறத் துவங்கினார். 1995-ம் ஆண்டு முதல் 1998-ம் ஆண்டு வரை, 25-நீச்சல் வீரர்களில், உலக நீச்சல் போட்டிக்குத் தகுதிபெற்ற ஒரே நபரும் இவரே. இவர் 6-முறை இந்தியாவுக்காக நீச்சல் போட்டிகளில் பங்குபெற்று விருதும் பெற்றுள்ளார். அவற்றுள், சுவிட்சர்லாந்தில் பெற்ற முதல்பரிசும் அடங்கும். இவருக்கு 1996-ம் ஆண்டு இந்திய அரசாங்கத்தால், அர்ஜுனா விருது வழங்கப்பட்டது.

மறக்காதிங்க சாதனை செய்தவரை......

Tuesday, July 23, 2013

வெள்ளரிக்காய் - cucumbers

வெள்ளரி:
1. நாவறட்சியை விரட்டுவதோடு, பசியையும்
உண்டாக்கும்.
2. உடலைக் குளிரவைக்கும்.
3. இரத்தத்தில் சிவப்பணுக்களை உருவாக்கும்
பொட்டாசியம் மிகுதி.
4. ஈரல், கல்லீரல் இவற்றில் சூட்டைத்
தணிக்கும் இப்பாகங்களில் ஏற்படும் நோய்
தணியும்.
5. வெள்ளரிக்காயை உண்ணுகையில் பசிரசம்
என்னும் விசேஷ ஜீரண நீர் சுரக்கிறது என்பதும்
விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்பு.
எனவே செரிமானம் தீவிரமாகும்.
பசி அதிகரிக்கும்.
6. மலத்தைக் கட்டுப்படுத்தும் பித்தத்தைக்
குறைக்கும்.
7. உள்ளரிப்பு, கரப்பான் போன்ற சரும
நோய்களைப் போக்கும்.
8. புகைப் பிடிப்போரின் குடலை நிகோடின்
நஞ்சு சீரழிக்கிறது. நஞ்சை நீக்கும் அற்புக
ஆற்றல் வெள்ளரிக்காய்க்கு உண்டு.
9. மூளைக்கு மிகச்சிறந்த
வலிமை தரக்கூடியது வெள்ளரி.மூளை வேலை
செய்து கபாலம் சூடு அடைந்தவர்களுக்குக்
குளிர்ச்சியும், மூளைக்குப் புத்துணர்ச்சியும்
வெள்ளரிக்காய் வழங்கும்.
10. சிறுநீரகக் கோளாறு களைச் சரி செய்கிறது.
எரிச்சலைக் கட்டுப்படுத்து கிறது.
11. பித்தம், பித்தநீர், பித்த சம்பந்தமான
தலை சுற்று, பித்த
வாந்தி இவைகளை குணப்படுத்தும்
12. சமீபத்திய ஆய்வுகளின் படி,
வெள்ளரி மூட்டுவலி வீக்க நோய்களைக்
குணமாக்குகிறது
13. வயிறு நிறைய உணவு உண்ட பின்
ஓரிரு வெள்ளரிக்காய் துண்டுகளை உண்ண
வயிற்றுப் பொருமல் நீங்கும்.
14. வெள்ளரிச்சாறுடன்,
எலுமிச்சை சாறு கலந்து சாப்பிட உடல் ஊட்டம்
பெறும்.
15. வெள்ளரிச்சாறுடன் பால் கலந்து முகத்தில்
தேய்த்து, ஊறிய பின் கழுவி வர முகம்
பளபளப்பு அழகு பெறும்.
16. வெள்ளரிக்காய் விதைகளை அரைத்து,
அடிவயிற்றில் பூச நீர்க்கடுப்பு நீங்கி, நீர்
எளிதில் பிரியும்.
17. வெள்ளரிச்சாறுடன் தேன் கலந்து சாப்பிட
வயிற்று நோய், தொண்டை நோய்கள் தீரும்.
18. இளநீருடன் வெள்ளரித்
துண்டுகளை கலந்து சாப்பிட வயிற்றுக்
கடுப்பு நீங்கும்.
19.
வெள்ளரி இலைகளை நீரிலிட்டு காய்த்து வடிகட்
இளநீரில் கலந்து மணிக்கு இரண்டு அவுன்ஸ்
வீதம் சாப்பிட வயிற்றுப் போக்குத் தீரும்.
20. வெள்ளரிக்காயை வட்டமாக
வெட்டி முகத்தில் வைக்க முகம்
குளிர்ச்சி பெறும். தோல் சுருக்கம் நீங்கும்.
21. தயிர் அல்லது மோரில்
வெள்ளரிக்காயை வெட்டிப் போட்டு சாப்பிட
தாகம் தீரும். அஜீரணம் நீங்கும்.
22. வெள்ளரிக்காய் துண்டுகளோடு தக்காளி,
காரட், பீட்ரூட் துண்டுகளைச் சேர்த்து உப்பு,
மிளகு சேர்த்து சாலட் போல் சாப்பிட
உடலுக்கு மிக நன்மை கிடைக்கும்.
23. வெள்ளரிக்காயை வட்டமாக வெட்டி,
உப்பு மிளகாய்த் தூள் சேர்த்து சாப்பிட
வயிற்றுக்கோளாறுகள் மாறும்.
24. வெள்ளரிச்சாறுடன்
எலுமிச்சை சாறு கலந்து முகத்தில்
தேய்த்து ஊறியபின் கழுவி வர,
கோடை வெயிலால் ஏற்பட்ட முகச் சுருக்கம்
மாறி முகம் பொலிவு பெறும்.
25. வெள்ளரிக்காயைத்
தொடர்ந்து உண்டு வந்தால் சொறி,
சிரங்கு குணமாகும். நரம்புகள் வலுப்பெறும்.
மஞ்சள் காமாலை குணமாகும

26. சிறுநீர் பிரியாமல் அவதிபடுபவர்கள்,
நீரிழிவு நோயாளிகள் வெள்ளரிக்காய்,
வெள்ளரி விதை சாப்பிட உடனடி நிவாரணம்
கிடைக்கும்.
27. வெள்ளரிக்காயை நறுக்கி கண்களின் மேல்
சிறிது நேரம் வைத்திருந்தால் கருவளையம்
மறையும்.
28. உடலுக்கு குளிர்ச்சியைத் தந்து சிறுநீர்
வெளியேற உதவும்.
29. கண் பொங்குதல், உடல் சூடு, மலக்கட்டு,
தீர்க்கும் உயர்ந்த உணவு கடல் உப்பை உடலில்
குறைக்கும் உணவு.
30. சீறுநீரக எரிச்சல், கல் அடைப்பு,
மூலச்சூடு, மூலவியாதிகள் ஒரு வாரத்தில்
சரியாகும்.
31.உடல் பருமன், உடல் தொப்பை, மூட்டுப்
பிணிகள், வலிமைகளை குறைத்திடும் இரத்த
அழுத்தம்.
32. நீரிழிவு நோயாளிகளுக்கு அவசிய உணவுச்
சாறு
நீரிழிவு பிணியாளர்களின் மருந்துகளைக்
குறைப்பதில் வெள்ளரிச்சாறு விடிவெள்ளியாய்
இருக்கிறது
ஒரு முக்கிய குறிப்பு :
நுரையீரல் கோளாறுகள், கபம் & இருமல்
உள்ளவர்கள் வெள்ளரிக்காயைச்
சாப்பிடுவது நல்லதல்ல.

இங்கிலாந்தின் புத்திசாலி குழந்தை போட்டி: தமிழ் சிறுமி முதலிடம் !

பிரிட்டனில் நடைபெற்ற குழந்தைகளுக்கான அறிவுத்திறன் போட்டியில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தமிழ்ச் சிறுமி ஸ்ரீநிதி முதலிடம் பெற்றுள்ளார்.
பிரிட்டனின் சேனல் -4 மற்றும் மென்சா அமைப்பு இணைந்து புத்திசாலிக் குழந்தையை தேர்வு செய்யும் போட்டியை நடத்தியது. ஆண்டு தோறும் நடத்தப்படும் இந்தப் போட்டியில் இந்த ஆண்டு 2000 பேர் கலந்து கொண்டனர். நான்கு சுற்றுகளாக நடத்தப்பட்ட இதன் இறுதிப் போட்டிக்கு 21பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதில் ஸ்ரீநிதி முதலாவதாக வந்து வெற்றி பெற்றுள்ளார்.
ஸ்ரீநிதியின் தந்தை பிரகாஷ் மென்பொருள் பொறியாளராக பணியாற்றி வருகிறார்.இந்திய வம்சாவளிக்குழந்தை ஒன்று இப்போட்டியில் வெல்வது இதுவே முதல்முறையாகும்.

Sunday, July 21, 2013

வீட்டில் தனியாக இருக்கும் போது மாரடைப்பு ஏற்பட்டால் ?

வீட்டில் தனியாக இருக்கும்
போது மாரடைப்பு...
வீட்டில் தனியாக இருக்கும்
போது மாரடைப்பு வந்தால்
உங்களை நீங்களே எப்படி காப்பாற்றிக்கொள
்வது....?
வேலை பளுவின் காரணமாக, மற்றும் இதர சில
பிரச்சனைகள் காரணமாக உங்கள் மனம் மிகவும்
அழுத்தத்துடன் உள்ளது,
நீங்கள் மிகவும் படபடப்பாகவும்,
தொய்வாகவும் உள்ளீர்கள்.
திடீரென்று உங்கள் இதயத்தில் அதிக "வலி"
ஏற்படுவதை உணர்கிறீர்கள்,
அந்த வலியானது மேல்
கை முதல்தோள்பட்டை வரைபரவுவதை உணருக
உங்கள் வீட்டில்
இருந்து மருத்துவமனை ஒரு ஐந்து
மைல் தூரத்தில் இருப்பதாக
வைத்துக்கொள்வோம்,
ஆனால் உங்களால் அந்த ஐந்து மையில்
தூரத்தை கடக்க முடியாது என உங்கள்
மூளை உங்களுக்கு சொல்கிறது
இந்த நேரத்தில் நம் உயிரை நாமே காக்க என்ன
செய்யலாம்...??
துரதிஷ்ட வசமாக மாரடைப்பு ஏற்படும்
போதெல்லாம் இறப்பவர்கள் அதிகமாக தனியாக
இருந்திருப்பவராக உள்ளனர்..! உங்கள் இதயம்
தாறுமாறாக துடிக்கிறது..
நீங்கள் சுயநினைவை இழக்க வெறும் 10
நொடிகள் தான் உள்ளது. இப்போது நீங்கள்
செய்ய வேண்டியது:
"தொடர்ச்சியாக மிக ஆக்ரோஷமாக இரும்ப
வேண்டும்,
ஒவ்வொரு முறை இரும்புவதர்க்கு முன்னரும்
மூச்சை இழுத்து விட வேண்டும்,
இருமல் மிக ஆழமானதாக இருக்க வேண்டும்,
இருதயம் இயல்பு நிலை திரும்பும் வரையில
அல்லது வேறொருவர் உதவிக்கு வரும்
வரையிலோ
ஒவ்வொரு இரண்டு நொடிக்கும்
மூச்சை இழுத்து விட்டு இரும்பிக்கொண்டே
இருக்க வேண்டும்.
மூச்சை இழுத்து விடுவதினால்
நுரை ஈரலுக்கு ஆச்சிஜன் சீராக செல்ல
வழி வகுக்கிறது,
இருமுவதால் இருதயம் நிற்பதில்
இருந்து தொடர்ச்சியாக துடித்துக்கொண்ட
ே இருக்க உதவும்,
இதனால் ரத்த ஓட்டம் சீரடையும்.
இரும்புவதால் ஏற்படும்
அதிர்வினால் இதயம் சீராக துடிக்கும்"..
பின்னர் இருதயம் சீரடைந்ததும், அருகில் உள்ள
மருத்துவமனைக்கு செல்லலாம்..
இந்த தகவலை குறைந்தது உங்களின்
பத்து நண்பர்களுக்காவது பகிருங்கள்..
தேவை இல்லாத விசயங்களையும்,
ஜோக்குகளையும் பகிர்வோர்,
உயிரை காக்கும் இது போன்ற விசயங்களையும்
பகிருங்கள்....!!!!

Saturday, July 20, 2013

அஜித் - சில உண்மைகள்

அஜித் :இது நடிகர்
அஜித்தை பற்றி புகழ்ந்து எழுதப்பட்ட
கட்டுரை அல்ல அஜித் பற்றிய
சிலஉண்மை வரிகள்:யார் பின்பலமும் இல்லாமல்
தமிழ் சினிமா துறைக்கு வந்த இளைஞன் .
மெக்கானிக்காக இருந்தஇவர் பைக் ஓட்டுவதில்
பிரியர். பைக் ரேஸில் சேர பணத்துக்காக
திரைத்துறையை தேடிவந்தவர் . பலஇடம்
தனியாக ஏறி பல அவமானங்களுக்கு பின் நடிக்க
வாய்ப்புகிடைத்தது. ஆனாலும் இவர் வசன
உச்சரிப்பு யாருக்கும் பிடிக்கவில்லை ,
பலஇயக்குநர்களின் வீட்டில் வாட்ச்மேன் போல
காத்துகிடந்து வாய்ப்பு பெற்று தொடர்ந்து நடிக்
ஆரம்பித்தார்.நடித்ததற்கு சம்பளம்
கேட்டு இயக்குநர்கள் வீடு தயாரிப்பாளர்வீட
ு என பகல் இரவாக அலைந்தார். பின் கிடைத்த
பனத்தை வைத்து ரேஸில் சேர்ந்தார் . ரேஸில்
மிக பெரிய விபத்துநடக்க பல
அறுவை சிகிச்சைகளோடு உயிர்திரும்பினார்.
பின் ரேஸ்
ஆசையை விட்டுவிட்டு நடிப்பை தேர்ந்தெடுத்த
். அவர் நடித்த ஆசை படம் மூலம் நல்ல நடிகன்
என்ற பெயர் பெற்றார்.தொடர்ந்து பல
தோல்வி படங்கள் சில வெற்றிபடங்கள்
கொடுத்தவந்தார்.ஆனாலும்
இவருக்கு வசனமே வராது என்று பலநக்கலடித்த
. பின் வாலி படம்மூலம் தன் கண்களும் வசனம்
பேசுமடா என்று சொல்லாமல் கூறி அந்த
நடிப்புக்காக விருதுகளை பெற்றார்.ரசிகர்
கூட்டம் உருவாகியது.நாளடைவில்
அஜித்தை தல என்று ரசிகர்கள் கூப்பிட
ஆரம்பித்தனர். பல திரைப்படங்களுக்காக
தென்னிந்திய ஆஸ்கார் என்றழைக்கபடும்
பிலிம்பேர் விருதுகளை பெற்றார்.அதிக
விருதுகளை வென்ற ஒரே இளம் கதாநாயகன்
என்ற சிறப்பை பெற்றார். தன்
காதலி நடிகை ஷாலினி அவர்களை திருமனம்
செய்துகொன்டார்.கார் ரேஸில் கலந்து பல
பதக்கங்களை வென்றார். தமிழ் சினிமாவில்
தனக்கென தனி இடம் பிடித்தார். பல
அறுவை சிகிச்சைக்கு பின்னரும் தன் படங்களில்
வரும் உயிருக்கு ஆபத்தான சன்டை காட்சியில்
டூப் போடாமல் நடித்தார். பின்
திடிரென்று ரசிகர்கள் நலன் கருதி ரசிகர்
மன்றங்களை கலைத்தார் . அப்போது இனி அஜித்
அவ்ளோதான் என்ற பலர் கூறினர்.
கலைத்தாலும் அவரது 50வது திரைப்படத்திற்க
ு கூடிய
கூட்டத்தை பார்த்து தமிழ்திரையுலகம்
மிரன்டுபோனது. திரைதுறையில் ரஜினிக்கு பின்
அதிகம் ரசிகர்களை கொண்டவர். நல்லமனம்
கொண்ட மனிதன்ஃரசிகனை சுயநலத்துக்காக
பயன்படுத்தாமல் அவன் வாழ்க்கையில்
அக்கறை கொண்ட ஒரே நடிகர். எங்கும் எதற்கும்
பயப்படாதவர்.நேர்பட பேசும் தைரியசாலி.
இதை தவிர ஹெலிகாப்டர்ஒட்ட
ுவதற்கு லைசென்ஸ் வைத்துள்ளஒரே ஆசிய
நடிகர் என்ற சிறப்பை பெற்றவர்.அன்றுஎவர்
துனையும் இல்லாம் சினிமாவுக்கு வந்த அஜித்
இன்று தமிழ்நாட்டின் தாரக மந்திரமான தல யாக
திகழ்கிறார்

Friday, July 19, 2013

கவிஞர் தாமரையின் கோபம்

கவிஞர் தாமரையின் கோபம் நியாயம் தானே!!

காங்கிரஸே.....!
எத்தனை கொடுமைகள்
செய்துவிட்டாய்
எங்கள் தமிழினத்திற்கு...

எத்தனை
வழிகளில் கெஞ்சியும் கூத்தாடியும்
காலில் விழுந்தும் கதறியும்
கொளுத்திக் கொண்டு செத்தும்
தீர்ந்தாயிற்று...

எதுவுமே காதில் விழாத உங்களுக்கு
இன்னும் தராத ஒன்று மிச்சம் உண்டு என்னிடம்....

அழுது வீங்கிய கண்களோடும்
அரற்றிய துக்கத்தோடும்
களைந்த கூந்தலோடும்
வயிரெரிந்து இதோ விடுகிறேன்..

கண்ணகி மண்ணில் இருந்து
ஒரு கருஞ்சாபம்!
உங்கள் சிம்மாசனம் வெடித்துத்
தூள் தூளாகட்டும்!!..


கவிஞர் தாமரை.

Monday, July 15, 2013

கடமை வீரர் காமராசர் வாழ்க்கை வரலாறு

கடமை வீரர் என்று புகழப்பட்ட காமராசர் . 
காமராஜரின் பிறந்த தினமான இன்று, "கல்வி வளர்ச்சி தினமாக'  கடைபிடிக்கப்படுகிறது.
கலைஞர் கருணாநிதி தனது சென்ற ஆட்சிக்காலத்தில் காமராஜர் பிறந்த தினத்தை  கல்வி வளர்ச்சி தினமாக அறிவித்து பள்ளிகள் தோறும் கொண்டாட  வைத்தார்.தமிழகத்தில் ஏழைகளும் கல்வி பயில காமராஜர் ஆற்றிய பணிக்கு  மிகச்சரியான புகழாரம்.

"கர்ம வீரர்' என அன்பாகஅழைக்கப்பட்ட காமராஜரின் வாழ்க்கை 1903 ஜூலை 15: இன்று விருதுநகராக  வளர்ந்திருக்கும் அன்றையதிருநெல்வேலி மாவட்டம்விருதுபட்டியில் குமாரசாமி  நாடார், சிவகாமி அம்மாள் தம்பதிக்குமகனாக பிறந்தார்.
 1914 : ஆறாம் வகுப்புடன் பள்ளிசெல்வதை நிறுத்திக் கொண்டார்.

Wednesday, July 10, 2013

நாகரீக கோமாளிகள்

ஐம்பதாயிரம் சம்பளம் என்பதால்
அம்மாவை மாற்ற தேவையில்லை
ஆங்கிலம் பேச தெரிந்தவர்கள் எல்லாம்
ஆகாயத்தில் இருந்து வந்தவரில்லை.

காலை வணக்கம் வார்த்தை எல்லாம்
கடல் கடந்து சென்றது
Good Morning என்ற வார்த்தையில் தான்
பல குடும்பம் விழிக்குது .

Fu*k என்ற வார்த்தை கூட
பெருமை பொங்க சொல்வர்..
நாங்கள் ஓ... என்று ஆரம்பித்தால் மட்டும்
ஒழுக்கம் இல்லாதவர் என்பர்.

அந்நிய உணவில் தனி ருசிதான்
அதில் ஒன்றும் தவறில்லை
ஆயின் வறண்ட ரொட்டியை
திண்ணக் கூட வறட்டு கவுரவம் என்ன?

Saturday, July 6, 2013

ஒரு சாதனை இந்திய விவசாயியின் வேதனை குரல்

ஒரு சாதனை இந்திய விவசாயியின்
வேதனை குரல்...
"பொதுவா ஒரு மூட்டை விதைய
போட்டா இருவத்தஞ்சி இல்லைனா முப்பது மூட்
ஆனால்
இயற்கை விவசாயத்தினை முறைப்படி செய்தால்
90 மூட்டை வரை எடுக்கலாம்...
நான் எடுத்து இருக்கேன்... அதற்காக அரசிடம்
இருந்து பட்டமும் வாங்கி இருக்கேன்... அமெரிக்க
சனாதிபதி என்னுடைய
தோட்டத்துக்கு வந்து பார்த்துட்டு பாராட்டிட்டு
ஆனா இவ்வளவு நடந்தும் நம்முடைய
அரசு இத மக்கள்கிட்ட கொண்டு போக
மாட்டேங்குது... காரணம் இதக்
கொண்டு போனா பூச்சிக் கொல்லி நிறுவனங்க,
உர நிறுவனங்க எல்லாம் அடிப்பட்டுப்
போகும்...வெளிநாட்டுக்
காரனுக்கு காசு கிடைக்காது...அதனால இத
மக்கள் கிட்ட கொண்டு போக மாட்டேங்கிறாங்க...
நான் விவசாயிங்க என்னால விவசாயம் தான்
பண்ண முடியும்... அதுல ஆராய்ச்சி பண்ண
முடியும்... நீங்க தான கணினி, இணையம்
அப்படி இப்படின்னு பல பேர்கிட்ட பேசுறீங்க...
நீங்க இந்த செய்திய எல்லாம் மக்கள் கிட்ட
பரப்பலாமே...செத்து போன மனுசனுக்குத் தான்
உசுரக் கொடுக்க முடியாது... ஆனா செத்துப்
போன மண்ணுக்கு உசுரக் கொடுக்க முடியும்...
இளைஞர்கள் முன்னாடி வந்தா நிச்சயம் நம்ம
மண்ணுக்கு உயிர் கொடுக்கலாம்."
அவர் பெயர் நாக இரத்தின நாயுடு ( http://
www.srinaidu.com/profile.htm )... அவரின்
தோட்டத்தினைப்
பற்றி ஒரு இணையமே ஆரம்பித்து இருக்கின்றார்
http://www.srinaidu.com/
தேவைபட்டால் தயங்காமல் பேசுங்கள்
தமிழிலேயே பேசுவார்.

Thursday, July 4, 2013

நெய்வேலி சிறப்பு பார்வை - Neyveli

தமிழ்நாட்டின் மின் தேவைக்கு கைகொடுக்கும் முக்கிய மின் உற்பத்தி நிறுவனம் என்.எல்.சி.

நெய்வேலியில் உள்ள இந்த நிறுவனத்தில் 2 அனல் மின் நிலையங்கள் உள்ளன. முதல் அனல்மின் நிலையத்தில் 600 மெகாவாட்டும், 2-வது அனல்மின் நிலையத்தில் 1470 மெகாவாட்டும், முதல் அனல் நிலையம் விரிவாக்கத்தில் 420 மெகாவாட்டும் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இதன் மொத்த மின் உற்பத்தி திறன் 2490 மெகாவாட். இவற்றில் சராசரியாக 2 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் கிடைக்கிறது.

Popular Posts