Annadurai - அண்ணாதுரை
by tnkesaven
New Tamil Jokes - Penmai.comToday,
அண்ணாதுரையின் வளர்ப்பு மகன் பரிமளம் :
என் தந்தை அண்ணாதுரை, புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, சென்னை பொது மருத்துவமனையில் இருந்த நேரம் அது. அப்பாவை, சிகிச்சைக்கு அமெரிக்காவிற்கு அனுப்பலாம் என, என் தந்தையுடன், நானும், என் அம்மா ராணியும் போக முடிவெடுத்து, வெளிநாடு செல்ல அனுமதி கோரியிருந்தனர்.
"அண்ணாதுரையுடன் செல்வதற்கு அவருடைய மனைவி அல்லது மகன் இருவரில், யாராவது ஒருவருக்கு மட்டும் தான் அனுமதி அளிக்க முடியும்...' என்று, அன்றைய நிதி அமைச்சர் மொரார்ஜி தேசாய் மறுத்து விட்டார்.
இதை, எப்படி அண்ணாதுரையிடம் சொல்வது என்று, கருணாநிதிக்கு தயக்கம். அவர் என்னை அழைத்து, "இது சென்சிடிவ் பிரச்னை. நீ அல்லது அண்ணி மட்டும் தான் செல்ல வேண்டும்...' என்று, சொல்லி விட்டு, "நீ தான் அண்ணா துரையிடம், "அண்ணியை மட்டும் அழைத்துச் செல்லுங்கள். நான், இரண்டொரு நாள் கழித்து, எப்படியா வது அங்கு வந்து சேர்ந்து கொள் கிறேன்' என்று சொல்லி, அண்ணா துரையை சம்மதிக்க வைக்க வேண்டும்...' என்று சொன்னார்.
நான் அப்பாவிடம் சென்று, மெல்ல இந்தப் பிரச்னையை எடுத்துச் சொன்னேன். அவர் என்னை ஒரு பார்வை பார்த்தார். அதிலே, ஆயிரமாயிரம் பொருள். என்னால், அந்தப் பார்வையை சமாளிக்க முடியவில்லை. "அப்பா, உங்களுடன் அம்மா வரட்டும். நான், கொஞ்ச நாள் கழித்து, அங்கே வந்து சேர்ந்து கொள்கிறேன்...' என்றேன்.
அதற்கு அப்பா சொன்ன பதில், எனக்கு வியப்பை அளித்தது. "ராணிக்கு ஒன்றும் தெரியாது. அது வந்து, என்ன செய்யப் போகிறது... நீ வா...' என்றார்.
நான் அதிர்ந்து, விக்கித்தேன். "நீ வா' என்கிறாரே... என்ன ஒரு பாசம். உலகத்தில், எங்கேயாவது தான் பெறாத ஒரு பிள்ளையிடம், இப்படியொரு பாசத்தை பொழியும் ஒரு மனிதர் இருப்பாரா...' என்று, எண்ணி நெகிழ்ந்தேன்.
அதன் பின், ராஜாராம், செழியன் ஆகியோர் நேராக டில்லிக்கு சென்று, பிரதமர் இந்திராவை சந்தித்து, நிலைமையை விளக்கி, அவர் தலையிட்டு, சட்ட விலக்களித்து, "இருவரும் அண்ணாதுரையுடன் செல்லலாம்...' என்று, அனுமதி பெற்றுத் தந்தார்.
"அண்ணாதுரை என் தந்தை' நூலில், டாக்டர் பரிமளம்.
***
கடந்த, 1952ம் ஆண்டு பொதுத் தேர்தல். அன்று இரவு 10:00 மணிக்கு, ஒரு பொதுக் கூட்டத்திற்கு பேச வந்திருந்தார் அண்ணாதுரை. காலை, மதியம், மாலை என, மூன்று கூட்டங்களில் பேசி, களைத்துப் போயிருந்தார். எனவே, இரவு நடந்த கூட்டத்தில், மேடையில் ஏறியதும், தன்னுடன் வந்திருந்த ஒரு சில முக்கியஸ்தர்களிடம், "சற்று நேரம், நீங்கள் உரையாற்றுங்கள். அது வரை நான் ஓய்வெடுத்துக் கொள்கிறேன்...' என்றபடி, மேடை இருக்கையில் அமர்ந்து, தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டிருந்தார். ஆனால், பேச எழுந்த ஒரு சிலரும், கூட்டத்தினரைப் பார்த்து, "நீங்கள் எல்லாரும், அண்ணாதுரை பேசப் போவதை, ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். எனவே, இத்துடன் விடை பெறு கிறேன்...' என்று, ஓரிரு நிமிடங் களில் உரையை முடித்துக் கொண் டனர்.
பாவம் அண்ணாதுரை. எழுந்து மைக் முன்னே வந்து, "தோழர் களே! காலை முதல், பல கூட்டங்களில் பேசி, களைத்துப் போயிருக் கிறேன், உடல் சோர்வால்! நிற்கவும் முடிய வில்லை; கால் வலி வேறு. தோழர்கள் பேசும் வரை ஓய்வு பெறலாம்; புது வலிவு பெறலாம் என்ற எண்ணத்தில், நண்பர்களைப் பேசும்படி கூறினேன். அவர்களெல்லாம், தெருக் கூத்திலே வருகிறானே கட்டியக்காரன், அவனைப் போல, "வந்தனம், தந்தனம் சபையோர்களே! சிறு மைந்தனை ஆதரிப்பீர்களே!' எனப்பாடி, இரண்டொரு, "கிர்கி' அடித்து வணக்கம் தெரிவித்து விட்டு, "அதோ... பின்னாலே துடி வேஷக்கார துரியோதன மகராசன் வருகிறார்...' எனக் கூறி, திரைமறைவிற்கு ஆடிப் போவதைப் போல, எல்லாரும், "அண்ணாதுரை பேசுவார்; அண்ணாதுரை பேசுவார்' என்று கூறிவிட்டு, உட்கார்ந்து விட்டனர். கட்டியக்காரன் அறிவிப்பைக் கேட்டு, துடி வேஷக்கார துரியோதன மகராசன், பரி வேடத்துடன் வந்து ஆட வேண்டிய நிலை ஏற்பட்டு விட்டதை போல நானும், பாதி ஓய்வுடன் வந்து, பேச வேண்டி யதாகி விட்டது...' என்றார்.
***
நடுத்தெரு நாராயணன்
Show commentsOpen link