ஒரு சமயம் சுவாமி விவேகானந்தர்
லண்டன்
மாநகருக்குச் சென்றிருந்தார்.
அங்கு அவரது நண்பர் ஒருவரின்
பண்ணை வீட்டில் தங்கியிருந்தார். அந்தப்
பண்ணை வீடு மிகப் பெரிய நிலப்பரப்பில்,
இயற்கை எழில் சூழ்ந்த இடத்தில்
இருந்தது.
அங்கே நிறைய மாடுகள் வளர்க்கப்பட்டன.
ஒரு நாள் மாலை,
பண்ணை மைதானத்தில்
விவேகானந்தர் வாக்கிங்
சென்று கொண்டிருந்தார். அவருடன்
நண்பரும்,
நண்பரின் மனைவியும்
நடந்து சென்று கொண்டிருந்தனர்.
அப்போது—
சற்றும் எதிர்பாராதவிதமாக
ஒரு மாடு அவர்களை நோக்கி சீறிப்
பாய்ந்து வந்தது. அதன் மூர்க்கத்தனமான
ஓட்டத்தைப் பார்த்து பயந்து போன
நண்பரின்
மனைவி,
அப்படியே மயங்கி விழுந்து விட்டார்.
அதைக் கண்டதும் விவேகானந்தரும்,
அவரது நண்பரும் துணுக்குற்றனர்.
மனைவியைத் தூக்க நண்பர் முயன்றார்.
அப்போது மாடு அவர்களை நெருங்கி வி
நண்பருக்குக் கையும் ஓடவில்லை;
காலும்
ஓடவில்லை.
இன்னும் சில நொடிகள் அங்கே இருந்தால்
மாட்டின் கொம்புகளுக்கு இரையாக
நேரிடும்
என்பதை உணர்ந்த நண்பர், தன் உயிரைக்
காப்பாற்றிக் கொள்ள
எழுந்து வேறு திசையில்
ஓடினார். ஆனால், விவேகானந்தர்
அப்படி இப்படி அசையாமல்
ஆணி அடித்தது போல் அந்த
இடத்திலேயே நின்றுவிட்டார்.
பாய்ந்து வந்த மாடு,
கீழே விழுந்து கிடந்த
நண்பரின் மனைவியையும்
விவேகானந்தரையும் விட்டு விட்டு,
ஓடிக்
கொண்டிருந்த நண்பரைத் துரத்தியது.
அதைக் கண்ட நண்பர் பின்னங்கால்
பிடறியில்
அடிக்க, உயிரைக் கையில் பிடித்துக்
கொண்டு ஓடினார். மாடும் விடாமல்
அவரைத்
துரத்தியது.
அதிர்ஷ்டவசமாக ஒரு கட்டடத்திற்குள்
புகுந்து தப்பினார் நண்பர். அதன்
பிறகே பண்ணை ஊழியர்கள்
ஓடிவந்து மாட்டைப் பிடித்துக் கட்டிப்
போட்டனர்.
விவேகானந்தர் அதன் பிறகே அந்த
இடத்தை விட்டு அசைந்தார்.
அங்கு வந்த நண்பருக்கோ ஒரே ஆச்சரியம்.
அப்போது நண்பரின் மனைவியும் மயக்கம்
தெளிந்து எழுந்தார்.
""சிறிது கூட பயமே இல்லாமல் அந்த
ஆபத்தான
நேரத்திலும் ஒரே இடத்தில் உறுதியாக
உங்களால் எப்படி நிற்க முடிந்தது?''
என்று கேட்டார் நண்பர்.
அதைக் கேட்டு மெல்லப் புன்னகைத்த
விவேகானந்தர், ""நான் வித்தியாசமாக
எதையும்
செய்து விடவில்லை.
வருவது வரட்டும்;
சமாளிப்போம் என்ற ஒருவித மன
உறுதியுடன்
நின்றுவிட்டேன். ஓடுபவரைக் கண்டால்
துரத்திச்
செல்வது மிருகங்களுக்கு உரிய
குணம். அதனால்தான்
மாடு என்னை விட்டு விட்டு, ஓடிக்
கொண்டிருக்கும் உங்களைத்
துரத்தியது,''
என்று முடித்தார்.
உயிருக்கு ஆபத்தான நேரத்தில் கூட,
அதைக்
கண்டு பயந்து ஓடாமல், வருவது வரட்டும்
என்ற
மன உறுதி பெற்றிருந்த
சுவாமி விவேகானந்தரைப் பார்த்துப்
பெரிதும்
வியந்தார் நண்பர்.
Tuesday, September 3, 2013
பயந்து ஓடாமல், வருவது வரட்டும் என்ற மன உறுதி
Labels:
சுவாமி விவேகானந்தர்,
விவேகானந்தர்
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
-
கடமை வீரர் என்று புகழப்பட்ட காமராசர் . காமராஜரின் பிறந்த தினமான இன்று, "கல்வி வளர்ச்சி தினமாக' கடைபிடிக்கப்படுகிறது. கலைஞர் ...
-
ஐம்பதாயிரம் சம்பளம் என்பதால் அம்மாவை மாற்ற தேவையில்லை ஆங்கிலம் பேச தெரிந்தவர்கள் எல்லாம் ஆகாயத்தில் இருந்து வந்தவரில்லை. காலை வணக்கம்...
-
அஜித் :இது நடிகர் அஜித்தை பற்றி புகழ்ந்து எழுதப்பட்ட கட்டுரை அல்ல அஜித் பற்றிய சிலஉண்மை வரிகள்:யார் பின்பலமும் இல்லாமல் தமிழ் சினிமா ...
-
காட்டிற்குள் ராஜாங்கம் நடத்திய சந்தன கடத்தல் வீர்ப்பன் இந்திய தமிழ் நாடும் கர்நாடக எல்லையுமான ஒரு அடர்ந்த காட்டுப்பகுதிக்கு மத்...
-
கீழே கொடுக்கப்பட்டுள்ளது தான் உண்மையிலேயே சிதம்பர ரகசியமா என்பது அந்த நடராஜர் க்கு மட்டுமே வெளிச்சம் - இருப்பினும் இப்படியும் நம் முன்...
-
இனிமேல் நாம் 2000 வருடம் பழமையானவர்கள் என்ற பழங்கதையை விட்டு விட்டு 20,000 வருட உலகின் முதல் இனம் ,நம் தமிழ் இனம் என்று பெருமையுடன் கூற...
-
தூத்துக்குடி--வரலாறு Toothukkudi History - Tuticorin History தூத்துக்குடி--வரலாறு ,, தூத்துக்குடி எனும் பெயர் இந்நகருக்கு வந்ததற்கான...
-
ஒரு சாதனை இந்திய விவசாயியின் வேதனை குரல்... "பொதுவா ஒரு மூட்டை விதைய போட்டா இருவத்தஞ்சி இல்லைனா முப்பது மூட் ஆனால் இயற்கை விவசாயத்...
-
எம்.ஆர்.ராதா பற்றி சுவையான சிறு குறிப்புக by thenuraj New Tamil சினிமாவில், சீர்திருத்தங்கள், நாடகத்தில், கலகக்காரர். அரசியல் மேடையில்...
No comments:
Post a Comment