Wednesday, September 11, 2013

சுப்பிரமணிய பாரதி நினைவுதினம் இன்று (11-09-1921)

தமிழால் இணைவோம்:
சுப்பிரமணிய பாரதி
நினைவுதினம் இன்று
(11-09-1921)

கவிஞர், எழுத்தாளர், பத்திரிக்கையாசிரியர், விடுதலை வீரர், சமூக சீர்திருத்தவாதி என பன் முகம் கொண்டவர் பாரதியார்.

பாரதியின் எழுத்துக்கள் நம் நாட்டு விடுதலைக்கு வித்திட்டது. நவீன கவிதைகளுக்கு வித்திட்ட கவிஞன் பாரதி.

பாரதியின் இயற்பெயர் சுப்பையா (எ) சுப்பிரமணியம். சுப்ரமணிய பாரதியின் கவித்திறனை பாராட்டி பாரதி என்ற பட்டத்தை எட்டப்ப நாயக்க மன்னார் அவரின் அரசவையில் வழங்கப்பட்டது.

1912ல் கீதையை தமிழில் மொழிபெயர்த்தார் பாரதி. இந்தியா என்ற பத்திரிகையில் தன் போராட்சி எழுத்துக்களை விதைத்து பிரிட்டிஷ் அரசால் கைது செய்யப்பட்டு சிறை சென்றார்.

தன் கவிப்புலமையால் சிறு பிள்ளைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரின் மனதையும் கவர்ந்தவன் பாரதி.

1921ல் திருவல்லிகேணியில் கோயில் யானை ஒன்றால் தூக்கி எறியப்பட்டு, அதிர்ச்சியுற்று, நோய்வாய்ப்பட்டு 1921 செப்டம்பர் 11ம் தேதி நள்ளிரவுக்குப் பின் இவ்வுலக வாழ்விலிருந்து விடுதலை பெற்றார்.

பாரதியின் உயிர் உலகில் இருந்து விடை பெற்றிருந்தாலும் அவரின் கவிதைகளும், விடுதலைக்காக அவர் எழுதிய வாசகங்களும், அவரின் புகழும் மறையாமல் நெஞ்சில் நிற்கிறது.

"கவிதை எழுதுபவன் கவியன்று. கவிதையே வாழ்க்கையாக உடையோன்,
வாழ்க்கையே கவிதையாகச் செய்தோன், அவனே கவி " - பாரதி.

இந்த கவிதைக்கு சிறந்த உதாரணம் பாரதியை தவிர வேறு யாராக இருக்க முடியும்.

பாரதியின் உடலுக்குத்தான் விடைகொடுத்தோம் அன்று.. வாழும் ஒவ்வொரு தமிழனின் நெஞ்சிலும் பாரதியின் உணர்வுகள் வாழ்ந்துகொண்டிருக்கிறது.

#நந்தமீனாள்
மதுரை.

தமிழால்

No comments:

Post a Comment

Popular Posts