Thursday, September 26, 2013

சிவாவுக்கும், சந்தானத்துக்கும் ஏழாம் பொருத்தம் siva and santhanam

Siva and santhanam
சிவாவுக்கும், சந்தானத்துக்கும் ஏழாம் பொருத்தம்

சந்தானம், சிவகார்த்திகேயன் இருவருமே விஜய் டி.வி.யில் இருந்து சினிமாவுக்கு வந்தவர்கள். ஆனால், ஏனோ சிவாவுக்கும், சந்தானத்துக்கும் எப்போதுமே ஏழாம் பொருத்தம் தான்.

'யா யா' படத்தில் 'மிர்ச்சி' சிவா வேடத்தில் முதலில் சிவகார்த்திகேயன் தான் நடிப்பதாக இருந்தது. அவரிடம் பேசி அட்வான்ஸும் கொடுத்து விட்டார்களாம். 'அவன் நடிச்சா... நான் நடிக்க மாட்டேன்' என்று சந்தானம் கண்டிஷன் போட்டதால், சிவகார்த்திகேயனைத் தூக்கிவிட்டு 'மிர்ச்சி' சிவாவை நடிக்க வைத்தனர்.

அடுத்து 'ராஜா ராணி' படத்திலும் ஜெய் நடிக்கும் கேரக்டரில் முதலில் சிவகார்த்திகேயன் நடிப்பதாக இருந்தது. அவரிடம் பேச்சு வார்த்தையும் நடபெற்று வந்தது. அங்கேயும் சந்தானம் புகுந்து சலம்பல் செய்ததால் சிவாகார்த்திகேயனை நீக்கிவிட்டு ஜெய்யை நடிக்க வைத்தனர்.

'ரெண்டு பேரும் காமெடியன்கள் தான். ஆனா, அவனுக்கு மட்டும் ஹீரோ சான்ஸா குவியுதே...' என்ற விரக்தியில் தான் சந்தானம் இப்படிப் பண்ணுகிறார் என்கிறார்கள்.

இதனால் சந்தானம் மீது செம கடுப்பில் இருக்கிறாராம் சிவகார்த்திகேயன். பிரச்னை எப்போது வெடிக்கப்போகிறது என ஆர்வத்துடன் காத்திருக்கிறார்கள் இருவராலும் வாய்ப்பின்றித் தவிக்கும் சில காமெடியன்கள்.

Show commentsOpen link

No comments:

Post a Comment

Popular Posts