Friday, August 30, 2013

நம் தமிழ் மொழி தான் எல்லா துறைகளிலும் முன்னோடி

தமிழால் இணைவோம்:
தமிழர்கள் பெரும்பாலும் எல்லா துறைகளிலும் முன்னோடியாகவும், முடிந்த வரை தாங்கள் பயன்படுத்தும் சொற்களை கூட நேர்மறை எண்ணங்கள் (positive thinking) கொண்டதாக இருக்க வேண்டும் என்றே நினைத்தனர், அப்படி அவர்கள் உருவாகிச் சென்ற மொழி தான் நம் தமிழ். உதாரணத்திற்கு மேலிருந்து கொட்டும் நீரைக் கூட அவர்கள் எதிர் மறையாக "நீர் வீழ்ச்சி" என்று அழைக்காமல் "அருவி" என்றே அழைத்தனர், ஆனால் தற்போது நாம் வெள்ளைகாரர்கள் கொடுத்துச் சென்ற "WATER FALLS" என்ற வார்த்தையை தமிழாக்கம் செய்து அதை "நீர் வீழ்ச்சி" என்ற எதிர் மறை சொல்லை கொண்டே அழைக்கிறோம். இது போன்று எவ்வளவோ நல்ல தமிழ்ச் சொற்களை நம்மை அறியாமல் நாம் தினமும் இழந்து வருகிறோம்.முடிந்த வரை நம் பழைய தமிழ்ச் சொற்களை பேச்சிலும்,எழுத்திலும் கொண்டு வர முயற்சிப்போம். வாழ்கையில் நேர்மறையான எண்ணங்கள் தானாய் வரும்.

@சுந்தர் ராமன்

Visit our Page -► தமிழால் இணைவோம்

Thursday, August 29, 2013

தமிழ்தாசன் - பெரியார்தாசன் periyardasan


------- என் மரணத்திற்கு பின் --------

நான் இறந்த பிறகு
எனக்கு சவப்பெட்டி செய்யும்
பணத்தில்
கூரையில் பொத்தல் விழுந்த
குளியலறைக்கு
கதவுகள் செய்து கொடுங்கள்.

மேஜிக் ஸ்டிக் - சின்ன சின்ன சந்தோஷங்கள் magic stick

தமிழால் இணைவோம்:
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அலுவலக பணி நிமித்தம் நியூஜெர்சிக்கு சென்றிருந்தேன். புறப்படும்போதே எனது மகள் சென்னைக்கு திரும்பி வரும்போது மேஜிக் ஸ்டிக் வாங்கி வரவேண்டுமென்று சொல்லி சொல்லி அனுப்பியிருந்தாள். அப்படியென்றால் என்னவென்று கூட கேட்காமல் அவசரத்தில் வீட்டிலிருந்து மீனம்பாக்கம் ஏர்போர்ட் கிளம்பி விட்டேன்.
நியூஜெர்சியிலிருந்து சென்னைக்கு கிளம்பும்போது போன் தொல்லை ஆரம்பித்தது. மேஜிக் ஸ்டிக் வாங்கியாச்சா என்று. மேஜிக் ஸ்டிக்ன்னா என்னவென்று யோசித்து மண்டை காய்ந்துவிட்டது. அது என்ன மேஜிக் ஸ்டிக் என்று அவளையே கேட்டேன். அது கலராக பென்சில் போல இருக்கும். அதை மனிதர்கள் முன்னால் வைத்து மந்திரம் சொல்லி சுற்றினால் மனிதர்கள் மறைந்துவிடுவார்கள் என்று. நான் இருந்த டென்ஷனில் செம காண்டாகிவிட்டேன். சரியென்று ஊருக்கு கிளம்பும்முன் வால்மார்ட், ஸ்டாபிள், டாய்ஸ்சரஸ் போன்ற

Wednesday, August 28, 2013

காஸ்ட்ரோ


"பாராட்டு"


கொசுக்களின் பெருக்கத்தை இயற்கை முறையில்
தடுக்கும்,புது முறையை கண்டுபிடித்த பள்ளி மாணவன்
காஸ்ட்ரோ சொல்கிறார் ;

நான்,புதுச்சேரியை சேர்ந்தவன்.
பாகூரில் உள்ள பாரதி அரசு மேல்நிலை பள்ளியில்
பிளஸ் 1 படிக்கிறேன்.

மலேரியா, டெங்கு போன்ற நோய்களை பரப்பும்
கொசுக்களை அழிப்பது, இன்றளவும் சவாலாகவே உள்ளது.

மழைநீர், சிறு சிறு பள்ளங்களில்
தேங்கி கொசுக்களின் பிறப்பிடமாக அமைகிறது.

இதனால் பள்ளங்களில் தேங்கி இருக்கும் கொசுக்களின்
வளர்ச்சியை கட்டுப்படுத்த, ஆசிரியர் மங்கையர்கரசி உதவியுடன் முயற்சித்தேன்.

செயற்கையான வேதியல் மருந்துகளை பயன்
படுத்துவதை தவிர்த்து, இயற்கையான பொருட்களை
தேடியபோது, சப்பாத்திகள்ளி உதவியது.

Tuesday, August 27, 2013

ராஜ்கிரண் Rajkiran

தமிழால் இணைவோம்:
16வயதினிலே படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவுக்கு வந்த சூழ்நிலையில் படத்தை பார்த்த விநியோகஸ்தர்கள் யாரும் படத்தை வாங்க விரும்பவில்லை.

"விளையாட்டுப் பையன் மாதிரி நடிச்சிக்கிட்டு இருந்த கமலஹாசனை இப்படி கோவணம் கட்டி, வெத்தல பாக்கு போட வச்சிட்டாங்க,அப்புறம் எப்படி படம் ஓடும்" என்பது தான் அவர்கள் சொன்ன காரணம்.

Monday, August 26, 2013

இலங்கை இறுதிப்போரில் இந்திய கொடி தாங்கிய கப்பல்

சற்றுமுன் செய்திகள்:
இலங்கை இறுதிப்போரில் இந்திய கொடி தாங்கிய கப்பல்.

இலங்கையில் நடந்த இறுதி புத்தத்தின் போது ராணுவத்தினரிடம் சரணடந்த கைதிகள் சிலர் காணாமல் போயுள்ளனர், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த வேண்டுமென இலங்கை நீதிமன்றத்தில் காணாமல் போனவர்களில் உறவினர்கள் ஐந்து ஆட்கொணர்வு மனு கொடுத்திருந்தனர், தற்பொழுது மேலும் ஏழு ஆட்கொணர்வு மனு புதிதாக கொடுக்கபட்டுள்ளது.

இம்மனுவில் சம்பவங்களை விளக்கியிருக்கும் மனுதாரர், இறுதி யுத்தத்தின் போது வான்வழியாக இலங்கை ராணுவம் கொத்து குண்டுகளையும், ராசாயன குண்டுகளையும் வீசியது, அங்கிருந்த மக்கள் உடல் விகாரமாகி, துடிதுடித்து இறந்ததை கண்ணால் கண்டதாக சொல்லியிருக்கின்றனர்.

மேலும் அதிர்ச்சியூட்டும் தகவலாக வான்வழியாக இலங்கை ராணுவம் தாக்கி கொண்டிருந்த பொழுது கடற்கரை பகுதிகளில் இந்திய கொடி ஏந்திய கப்பல்கள் எங்கள் மேல் குண்டு வீசி தாக்குதல் நடத்தியது என்று கூறியுள்ளனர், இதுகுறித்தான தகவல்கலை இலங்கை மூத்த வழக்கறிஞர் கே.எஸ் ரத்னவேல் தெரிவித்துள்ளார்.

இவ்வழக்கை விசாரித்த நீதிமன்றம் வழக்கை செப்டம்பர் பனிரெண்டாம் தேதிக்கு தள்ளி வைத்தது, ஏற்கனவே உலக நீதிமன்றத்தில் இலங்கை போர் விதியை மீறியதற்கான வழக்கு ஒன்று நடந்து கொண்டிருக்கிறது, இலங்கை போரில் இந்தியா கலந்து கொண்டது உறுதியானால் போர் விதியை மீறிய குற்றத்திற்கு இந்தியாவும் பதில் சொல்ல வேண்டியிருக்கும் என சட்ட

Sunday, August 25, 2013

நேர்மையின் இலக்கனம் கக்கன் பிறந்த நாள்

தற்போதைய அரசியல்வாதிகள் யாரும் இதை படிக்கவோ பார்க்கவோ வேண்டாம்...மனசுக்கு ஒரு மாதிரி இருக்கும்...

எம்.எல்.எ.-வாக எம்.பி-யாக இருந்தது மட்டுமில்லை...காமராஜர் ஆட்சியில் பத்து ஆண்டுகள் மந்திரியாக வேறு இருந்தவர்...அதுவும் பொதுப்பணித்துறை மந்திரி...மேட்டூர் அணை, வைகை அணை எல்லாம் கட்டுமானப்பணி மேற்கொண்டவர்...

தன் வயதான காலத்தில் மதுரை அரசு பொது மருத்துவமனையில் படுக்கை வசதி கூட இல்லாமல் தரையில் படுத்து இருந்தவர்...எம்.ஜி.யார். வந்து சந்தித்த பிறகே அந்த மருத்துவமனை ஊழியர்களுக்கு இவர் யார் என்பதே தெரியும்...

எதையாவது தாங்கள் பெற்றுக்கொண்டே ஆக வேண்டும் என எம்.ஜி.ஆர் தொடர்ந்து வற்புறுத்தவே அரசு பஸ்ஸில் பயணம் செய்ய இலவச பஸ் பாஸ் மட்டும் போதும் என்று பெற்றுக் கொண்டவர்

இன்று அவரது பிறந்த நாள்....

தியாகி கக்கன் அவர்கள்!

தமிழன் தயாரிக்கும் குளிர்பானம்

தமிழனைத் தமிழன் தூக்கி விடவேண்டும்
இதை அதிகமாகப் பகிருங்கள்...........

ஒரு தமிழ் நிறுவனத்தின் சாதனையைப் பார்த்து இன்று சில அந்நிய நிறுவனங்கள் பயப்படுகிறது...

தென்மாவட்டத்தை சேர்ந்த (திருநெல்வேலி அல்லது விருதுநகர்) சேர்ந்த காளிமார்க் நிறுவனம் தயாரிக்கும் குளிர்பானம் தான் ”BOVONTO”.1916 ஆம் ஆண்டு பழனியப்பன் என்பவரால் தொடங்கப்பட்டது

தமிழகத்தில் உலகமயமாக்கலுக்கு முன்பு கொடி கட்டி பறந்த கலர்,சோடா போன்ற தமிழக தயாரிப்பு நிறுவனங்களுக்கு பல மாநிலங்களில் நல்ல வரவேற்பு இருந்த...ு வந்தது. ஆங்கிலேயர் அட்சிக்காலத்தில் ”செபென்சர்ஸ்” என்ற ஆங்கிலேய நிறுவனத்தின் கடும் போட்டியை மீறி தனது பயணத்தை தொடங்கியது. உலகமயமாக்கலுக்கு பிறகு அமெரிக்க நிறுவனங்களான PEPSI,COCA COLA தனது நிறுவனங்களின் சந்தையை விரிவாக்க ஏற்கெனவே உள்ள உள்ளூர் தமிழக நிறுவனங்களை ஒழித்து கட்டும் முயற்சியில் ஈடுபட்டன. அதில் வெற்றியும் கண்டன.ஆனால் இந்த சந்தைக்கான போரில் சில தமிழக நிறுவனங்கள் தப்பி பிழைத்தன.அதில் இன்று வரை உறுதியோடு பணம் கொழிக்கும் அந்நிய நிறுவனங்களின் போட்டியை மீறி தனது தரமான தயாரிப்பின் மூலம் மக்களிடம் நிலைத்து நிற்பது திருநெல்வேலியை சேர்ந்த BOVONTO நிறுவனம் தான்.

அந்நிய மோகத்தில் சில காலம் இந்த பெப்ஸி,கோகோ கோலாவை அதன் கண்கவரும் விளம்பரங்களால் விரும்பி வாங்கிய மக்கள், பெப்ஸி கோக்கில் பூச்சி மருந்து கலந்துள்ளதை அறிந்து அதனை வாங்குவதை குறைத்துக்கொண்டனர். அதனை மீறி இன்று மக்களுக்கு ஆபத்தான குளிர்பானத்தை தங்கள் விளம்பரத்தில் நடிகர்களை நடிக்க வைத்து பணத்தை கோடி கோடியாக கொட்டி தங்கள் விற்பனையை தொடர்ந்து நடத்தி வருகின்றன.இதனை மக்களும் ஏமாந்து குடித்து வருகின்றனர்.

ஆனால் ஆரம்ப காலகட்டங்களில் தங்களின் வியாபார நுணக்கங்களை மீறி தனது தரமான தயாரிப்புக்காக வாடிக்கையாளர்களிடம் `BOVONTO' அதிகளவில் விற்பனையாவதை கண்டு pepsi, coca cola போன்ற பூச்சி மருந்து வியாபாரிகள் பயந்து நடுங்கினர்..

குளிர்பான சந்தையில் நடந்த நிகழ்வுகளை பார்த்தால் தமிழ்க நிறூவனங்களை ஒழித்துகட்ட செயற்பட்ட இந்த கார்ப்பரேட் நிறுவங்களின் சூழ்ச்சி புரியும். பெப்ஸி , கோலாவை விட பொவெண்டோ விரைவில் விற்பனையாவது கண்டு முழு வேகத்தில் தங்கள் கார்ப்பரேட் மூளை கசக்கி பிழிந்து ஒரு திட்டத்தை தீட்டின. அதன் முதல் கட்டமாக ஆரம்பத்தில் கண்ணாடி பாட்டில்களில் விற்பனையான BOVONTO வின் காலி பாட்டில்களை கடைகடையாக ஏறி வாங்கி குவித்தனர். அந்த பாட்டிலின் விலையை(ரு.12) விட அதிக அளவு நம் வியாபாரிகளுக்கு கொடுத்து அவற்றை பெற்றனர்.மொத்தமாக வாங்கிய பாட்டில்களை உடைத்துவிட்டனர்.

இந்த சதியால் BOVONTO நிறுவனத்தால் புதிய பாட்டில்களை உடனே தயாரிக்கவும் முடியவில்லை. தனது குளிர்பான வியாபாரத்தை தொடரமுடியாமல் போனபோது மக்கள் விளம்பரங்களில் பார்த்த பெப்ஸி கோக் போன்ற குளிர்பானங்களை வாங்கி குடித்தனர். உள்ளூர் பியாபாரிகளிடம் தங்கள் குளிர்பானத்தை விற்றால் அதிக லாபம் கிடைக்கும் என்று கூறி தங்கள் நிறுவன தயாரிப்புகளை மட்டும் வாங்கிகுவிக்க வைத்தன.

இந்த நிறுவனங்களின் சதியை உணர்ந்து கொண்ட BOVONTO நிறுவனம் பிளாஸ்டிக் மற்றும் கண்ணாடி பாட்டில்களின் மூலம் தனது தரமான தயாரிப்புக்கு உள்ள வாடிக்கையாளர்களிடம் தான் பெற்ற நன்மதிப்பை கொண்டு தனது சந்தையை தக்க வைத்துக்கொண்டது. பின்பு தனக்கென ஒரு பாட்டில் தயாரிக்கும் தொழிற்சாலையையும் அமைத்துக் கொண்டு முன்னேறியது.இன்றளவிலும் குளிர்பான சந்தையில் நிலைத்து நிற்கும் ஒரே தமிழக நிறுவனம் காளிமார்க் தான்.

( கர்நாடகாவில் சில விவசாயிகள் பூச்சி மருந்துக்கு பதிலாக கோக்-கை பயன்படுத்தியதால் அமோக விளைச்சல் பெற்ற செய்தியை அறிந்தும், பெப்ஸியில் கரப்பான் பூச்சிகளை கண்டெடுத்த பின்பும் அதனை நம் மக்கள் வாங்கி குடிப்பது இன்றும் தொடர்கிறது)

ஆனால் ,இன்றளவிலும் தனது தரத்தில் சிறு குறையில்லாமல் தொடர்ந்து தனது தயாரிப்புகளை வழங்கி வருகிறது காளிமார்க் நிறுவனம். மாற்றாக ஒரே ஒரு முறை நம்மூர் தயாரிப்பான `BOVONTO'வை குடித்துப்பாருங்கள்.அப்புறம் பெப்ஸி, கோக் (பூச்சி மருந்துகளை) வாங்கவே மாட்டிர்கள்.

கார்ப்பரேட்டின் சூழ்ச்சியை முறியடித்த ஒரு தமிழ் நிறுவனத்தின் தயாரிப்பை குடிப்பதால் ஒரு தமிழ் நிறுவனத்திற்கு ஊக்கமளிக்கும் வகையிலும், ஒரு தரமான உள்ளூர் தயாரிப்புக்கு நம் பணத்தை செலவளித்த வகையிலும் நமக்கும் தமிழனாய் ஒரு பெருமை உண்டு.அதே போல் நமது செலவாணியும் உள்ளூர் வியாபாரியிடமே இருக்கும்.

ஆனால் PEPSI,COKE க்கு செலவளிக்கும் ஒவ்வொரு ரூபாயும் அமெரிக்க நிறுவனத்திடம் சென்று விடும்.
மேலும் தரமற்ற பொருட்களால் நம் உடலுக்கும் கேடு விளைவிக்க கூடியவை.

பூச்சி கொல்லி மருந்துகளான PEPSI, கோக், போன்றவற்றிலிருந்து மக்களைக் காப்பாற்றவும். ஒரு தமிழனைத் தமிழன் தூக்கி

Saturday, August 24, 2013

ஊரின் சிறப்பைக் கொண்டே அந்த ஊர்களுக்கு பெயர்

தஞ்சாவூரில் பிரகதீஸ்வரர்
திருவாரூரில் தியாகராஜர்
திருநெல்வேலியில் நெல்லையப்பர்
திருவையாறில் ஐயாரப்பர்

திருவண்ணாமலையில் அண்ணாமலையார்
திருவாவடுதுறையில் கோமுக்தீஸ்வரர்
திருவெண்காட்டில் சுவேதாரண்யேஸ்வரர்
திருவானைக்காவலில் ஜம்புகேஸ்வரர்

திருக்கருகாவூரில் முல்லைவனநாதர்
திருவாலாங்காட்டில் வடாரண்யேஸ்வரர்
திருமருகலில் ரத்தினகிரீஸ்வரர்
திருவிசநல்லூரில் யோகநந்தீஸ்வரர்

திருப்புகலூரில் வர்த்தமானீஸ்வரர்
திருத்தங்கூரில் வெள்ளிமலைநாதர்
திருக்கழுகுன்றத்தில் வேதகிரீஸ்வரர்
திருநீலக்குடியில் நீலகண்டேஸ்வரர்

திருச்சியில் தாயுமானவர்
திருநள்ளாரில் தர்ப்பாரண்யேஸ்வரர்
திருமணஞ்சேரியில் உத்வாகநாதர்
திருவேள்விக்குடியில் கல்யாண சுந்தரேஸ்வரர்

Friday, August 23, 2013

வீரத் தமிழர் அப்துல் காதர் - Abdul kathar

ஐதராபாத்தில் மெட்ராஸ் கபே திரைப்படம் திரையிடுவதற்கு எதிராக தானும் தன்னுடைய இரு பிள்ளைகளுடன் மட்டுமே போராடிய வீரத் தமிழர்.

அப்துல் காதர் எனும் தமிழர் ஐதராபத்தில் குடும்பத்துடன் தங்கி வேலை பார்த்து வருகிறார். இவரது சொந்த ஊர் கன்னியாகுமரி. இவர் ஒரு சிறந்த தமிழ் உணர்வாளர். தமிழகத்தில் மாணவர் போராட்டம் நடக்கும் போது இவர் தன்னுடைய குழந்தைகள், மனைவி, அம்மா , அப்பா என அனைவருடன் ஐதராபாத்தில் நடந்த உண்ணா நிலை போராட்டத்தில் கலந்து கொண்டார். சென்னையில் நடந்த பல்வேறு போராட்டங்களில் இவர் ஐதராபத்தில் இருந்து சென்னை வந்து கலந்து கொண்டுள்ளார். அணு உலை போராட்டங்கள், ஈழத் தமிழர் போராட்டங்கள் என தமிழர் நலம் சார்ந்த பல்வேறு போராட்டங்களில் கலந்து கொள்வார்.

டாக்டர் மதிவாணன்

தமிழால் இணைவோம்: இப்பவெல்லாம் நாலுபேரைத் திட்டுறது அல்லது கொல்லுறது தான் புரட்சி என்றளவுக்கு கருத்தியல் ஏற்படுத்தப்பட்டுள்ளது. புரட்சி என்றால் மாற்றம். மக்கள் வாழ்வில் ஒளிமயம் ஏற்படுத்தக்கூடிய எல்லா மாற்றங்கள்/ கண்டுபிடிப்புக்கள்/ அறச்செயல்கள் எல்லாமே புரட்சிதான். ஆரவாரமில்லாமல் அமைதியாக எத்தனையோ புரட்சிகளை நாம் செய்யலாம். 10-வது உலகத் தமிழாசிரியர் மாநாட்டில் நான் பார்த்த ஒரு புத்தாக்கச் செயல் வீரர். இவர் பெயர் டாக்டர் மதிவாணன். இவர் அடிப்படையில் கால்நடை மருத்துவர். ஆனால் தற்போது இவர் சாதனை செய்திருப்பது தையற்கருவியில் என்றால் வியப்பூட்டுகிறது. "மின்தமிழில் தையல்" என்பதற்கொப்ப சிறப்பாக தயாரிக்கப்பட்ட தையற்கருவியில் சில தொழில்நுட்ப மாற்றங்கள் செய்து, முதன் முறையாக துணியில் தைக்கும்போதே தமிழ் எழுத்துக்கள் வெளிப்படும் வண்ணம் மலேசியாவில் சாதனை படைத்து வருகிறார். டாக்டர் மதிவாணன், கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக பல செயல்முறை ஆராய்ச்சிகளுக்குப் பிறகு இந்தத் தையற்கலை துறையில் தானியங்கிக் கருவிவழி தமிழ் தைக்க பெரும் முயற்சி செய்து வெற்றி கண்டுள்ளார். இந்த மலேசியத் தமிழரின் சாதனையை எண்ணி வியப்பதோடு மட்டுமல்லாமல், மனதார வாழ்த்தவும் செய்கிறோம்.

வழி: Vasudevan Letchumanan

Tuesday, August 20, 2013

நீ சாதிக்க பிறந்தவன் துணிந்து நில்


"உயிரே போகும் நிலை வந்தாலும் தைரியத்தை விடாதே ! நீ சாதிக்க பிறந்தவன் துணிந்து நில் , எதையும் வெல்."


-சுவாமி விவேகானந்தர்.

மன உறுதியின் உச்சத்தை தொட்டவர்களில் இவரும் ஒருவர். இவரது வாழ்க்கையில் நடந்த அற்புதச் சம்பவங்களில் ஒன்றை உங்களுடன் பகிர்கிறேன்..

Monday, August 19, 2013

அனாதை இல்லங்கள்

அனாதை இல்லங்கள்
அதிகரிக்கும் நாட்டில்தான் 

 அரசமரப் பிள்ளையாரை
குழந்தைவரம் கேட்டு
சுற்றுகிறோம்.

மரங்களை வெட்டி
மறியல் செய்யும் நாம்தான்
மரக்கன்றை நட்டு
மழைவர காத்திருக்கிறோம்.

படித்தவனுக்கு வேலையற்ற
இந்த சமூகத்தில்தான்
நடிப்பவனுக்கு மன்றங்கள்வைத்து
பொழுதோட்டுகிறோம்.

பட்டினிச்சாவு நடக்கும்
இந்த தேசத்தில்தான்
வட்டிக்குவிட்டு
பணம் பெருக்குகிறோம்.

கற்புக்கரசிக்கு காவியம்வடித்த
இந்த மண்ணில்தாம்
கற்பழிப்பையும்
கண்டுகொள்ளாமல் இருக்கிறோம்.

ஆயிரமாயிரம் பொறியாளர்கள்
குவிந்திருக்கும் இங்குதான்
கொசுமட்டையைக் கூட
அயல்நாட்டிலிருந்து
இறக்குமதி செய்கிறோம்.

அரசியல் அமைப்பை
வாக்களித்து தெரிவுசெய்யும்
நாம் தான்
சாக்கடையென்று அதை
விமர்சனம் செய்கிறோம்.

களமாடி செயலாற்ற
உறுதிகொள்ளவேண்டிய
நாம்தான்
கவிதை கட்டுரையால்
இணையம் நிறைக்கிறோம்.

எதிர்நோக்கும் சமூக மாற்றத்தை
தொடங்கவேண்டிய நாம்தான்
எவனோ ஒருவன்
அதைச்செய்ய வருவானென
ஏமாந்து நிற்கிறோம்.

- கவிதை நேசன்

Sunday, August 18, 2013

கவுண்டமணி பற்றிஅரிய சுவையான தகவல்

***கவுண்ட மணி
பற்றிஅரிய சுவையான தகவல்…***

சுப்பிரமணி’யாக கவுண்டமணி பிறந்தது உடுமலைப் பேட்டைக்கு அருகில் உள்ள வல்லக் கொண்டபுரம்!.


கவுண்டமணிக்குப் பெரிய படிப்பெல்லாம் இல்லை.

ஆனால், பேச்சில் முற்போக்கான மேற்கோள்கள் தெறிக்கும்.

`பார்த்தால் காமெடியன், படிப்பில் அறிவாளி’ என்பார் இயக்குநர் மணிவண்ணன்!

Friday, August 16, 2013

சுதந்திரம் ஒன்றும் சும்மா கிடைக்கவில்லை

சும்மா கிடைக்கவில்லை சுதந்திரம்.
 
இன்று நாம் பெற்றிருக்கும் சுதந்திரம் நம் முன்னோர்களின்  தியாகத்தால் கிடைத்ததுதான். நாம் பள்ளிக்கூட பாட புத்தகங்களில் சுதந்திரத்திற்க்காக போராடிய சில தலைவர்களைப் பற்றி படித்திருக்கிறோம்.ஆனால் நாம் பள்ளியில் படிக்காத, நமக்கு தெரியாத பலர், சுதந்திர போராட்டத்தில்  ஈடு பட்டு, துன்பப்பட்டு, அதில் சிலர் தங்கள் இன்னுயிரையும் ஈந்துள்ளனர்.
 
சுதந்திர போராளிகளை அன்று அடைத்து கொடுமைபடுத்திய  இடம் அந்தமான் சிறை. இங்கு போராளிகள் நுகத்தடியில் மாட்டிற்கு பதிலாக விலங்கிடப்பட்டு, செக்கிழுக்க வேண்டும். காலை முதல் மாலை வரை செக்கிழுத்து அன்றைய கணக்குப்படி தினம் 25 பவுண்ட் எண்ணை எடுக்க வேண்டும்.ஓய்வு எடுக்காமல் செக்கு இழுத்தால்தான் இவ்வளவு எண்ணை எடுக்க முடியும். 25 பவுண்டிற்கு  எண்ணை குறைந்தால்  முதுகுத்தோல் கிழியும் அளவிற்கு கசையடி கிடைக்கும். சில சமயம்  படுக்க விடாமல், உட்காரவிடாமல் கை கால்களை அகட்டி வைத்து இரும்பு சங்கிலி மாட்டப்படும்.
 
புதுச்சேரியில் அரவிந்தாஸ்ரமம் அமைத்த அரவிந்தரை நமக்கு தெரியும்.அவர் ஆஸ்ரமம் அமைத்து, ஆன்மிக  வாழ்வில் ஈடுபடும் முன் வங்காளத்தில் அவர் ஒரு சுதந்திர போராட்ட வீரர். அப்போது அவர் பெயர் அரவிந்த கோஷ். இவர் தீவிரவாதத்தின் மூலமே சுதந்திரம் பெற முடியும் என நினைத்து போராடியவர்.
 
இவர் மட்டுமல்ல இவரது குடும்பமே, சுதந்திரத்திற்காக போராடிய குடும்பம்தான். அப்போது ஆங்கிலேயருக்கு எதிராக, வங்கத்தில் நடந்த அலிப்பூர் சதியில்  பங்கு பெற்றதற்காக பாரிந்தரர், உல்லாஸ்கர், ஹேமசந்திர  தாஸ் மூவருக்கும் கடும் தண்டனை விதிக்க பட்டது. மூவரும் கொடுஞ் செயல்களுக்கு பெயர் போன  அந்தமான் சிறையில் அடைக்க பெற்றனர். அங்கு நடந்த சித்திரவதை தாங்காமல் உல்லாஸ்கருக்கு பைத்தியம் பிடித்து விட்டது இவர் சென்னைக்கு அழைத்து வரப்பட்டு கீழ்பாக்கம் மன நல மருத்த்துவ மனையில் சேர்க்கபட்டார்
 
 
ஆங்கிலேயருக்கு எதிராக போராடியதற்காக பஞ்சாபில் கர்தார்சிங் என்பவருக்கு  தூக்கு தண்டனை வழங்க பட்டது. பொதுவாக தூக்கு தண்டனை விதிக்க பட்டவர்கள் துக்கிலிடுமுன் கவலைப்பட்டு  உண்ணாமல் உறங்காமல் இருந்து  மெலிந்து விடுவார்கள் .ஆனால் இவர் நாட்டிற்காக உயிர் விடுகிறேன் என்பதை மகிழ்ச்சியாக ஏற்றுக் கொண்டார். அப்போது அவருக்கு வயது 19 தான்.தூக்கிலிடப்ப்படும்வரை  சிறையில் ஆடிப்பாடி சந்தோசமாக இருந்தார். இதனால் இவர் 16.9.1916 அன்று தூக்கிலடப்படும்போது இவர் எடை அப்போதைய  கணக்குப்படி 12 பவுண்ட் கூடி இருந்தது. வாழ வேண்டிய இளம் வயதில் நாட்டுக்காக உயிர் விடுவதில் எத்தனை மகிழ்ச்சி பாருங்கள்.
 
சிட்டகாங் புரட்சியில் கைது செய்யப்பட்டு தூக்கு தண்டனை விதிக்க பட்டவர். சூர்யாசென். இவரை 12/04/1934ல் தூக்கிலிடும்போது வந்தேமாதரம் என முழக்கமிட்டார். வந்தே மாதரம் என சொல்லாதே என சிறை அதிகாரிகள் அவரை அடித்தனர். அவர் மறுத்து, மீண்டும் கோஷமிட ஆங்கிலேய அதிகாரிகள் எல்லோரும் சேர்ந்து அவரை அடித்து, அவர் மயங்க, மயங்கிய நிலையிலேயே தூக்கிலிட்டனர்,
 
30/10/1928  சைமன் கமிஷன் எதிர்த்து லாகூரில் லாலாலஜபதிராய்.  ஊர்வலம் நடத்தினார். சாண்டர்ஸ் என்ற ஆங்கிலேய அதிகாரி ஊர்வலத்தின் மீது, பயங்கர அடக்குமுறையை ஏவினான். லாலா லஜபதியை சுற்றி நின்று சாண்டர்ஸ் தலைமையில் ஆங்கிலேயர் தாக்கினர்.  இதனால் பலத்த காயமுற்ற லாலா 17/11/1928 ல் மரணமடைந்தார். இதற்கு பழி வாங்கும் விதமாக 17/12/1928,ல் சாண்டர்ஸ் பகத்சிங்கால் சுட்டு கொல்லப்பட்டான்.
 
சில வருடங்களுக்கு பின் பகத்சிங் கைது செய்யப்பட்டு, 23/03/1931 அன்று தூக்கிLIDAPATTARலிடபட்டார்.அவர் இறந்த உடல் கூட புரட்சியை தூண்டும் என எண்ணிய ஆங்கிலேயர்கள் அவர் உடல் பாதி எரிந்த நிலையிலேயே சட்லெஜ் நதியில் எறிந்து விட்டனர்.
 
வங்காளத்தில் வைஸ்ராய். ஹார்டிஞ்ச் பிரபு மீது குண்டு வீசியவன் தினநாத் என்பதை அறிந்த ஆங்கிலேயர்கள் அவரை கைது செய்ய முயன்றனர்.ஆனால்  குறிப்பாக அவர் யார் எனத் தெரியவில்லை. ஆகவே தினநாத் என்ற பெயர் கொண்ட எல்லோரையுமே வங்காளத்தில் கைது செய்து அடித்து துன்புறுத்தி விசாரித்தனர். ஒரு கிராமத்தில் ஒரு குறிப்பிட்ட வீட்டில் தினநாத் என இருப்பதாக அறிந்து  அந்த குடிசையில் சென்று தேடியபோது, ஆண்களே இல்லை.அங்கு இருந்த பெண்ணிடம் தினநாத் எங்கே என கேட்டபோது  இவன் தான் தினநாத் என தன் இடுப்பில் இருந்த ஒரு வயது பையனை காண்பித்தாள். போலிசார் அசடு வழிந்து திரும்பினர்.
இந்தியாவில் ஆன்மிக புரட்சி செய்தவர் சுவாமி விவேகானந்தர். இவரின் தம்பி பூபேந்திரநாத் ஆங்கிலேய ஆட்சியை எதிர்த்து புரட்சி செய்தவர். தமிழ் நாட்டில் சுதந்திர கனல் எழுப்பிய சுதேச மித்திரன்போல் வங்காளத்தில் விடுதலை முழக்கமிட்ட இதழ். “யுகாந்தர் ஆகும். இதன் ஆசிரியர் குழுவில் ஒருவர்தான் விவேகானந்தரின் தம்பி. ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக எழுதியதற்காக பூபேந்திரநாத்திற்க்கு ஓராண்டு சிறை தண்டனை கிடைத்தது
 
தமிழ் நாட்டிலும் சுதந்திர போராட்டத்தில் சாதாரண மக்கள் தீவிரமாக ஈடுபட்டனர். வெள்ளையனே வெளியேறு என மதுரை விளக்குதூண் அருகே முழக்கமிட்ட சொர்ணம்மாள், லக்ஷ்மி என்ற இரு பெண்களையும், போலீசார் மிருகத்தனமாக தாக்கி நிர்வாணமாக வீதியில் விட்டனர். இதற்கு முக்கிய காரணமாக இருந்தவன் இன்ஸ்பெக்டர் தீச்சட்டி கோவிந்தன் என்பவன். இதற்குபழி வாங்கும் விதமாக மதுரை  தேசிய தீவிரவாதிகள்  இந்த இன்ஸ்பெக்டரின் முகத்தில் ஆசிட் வீசி அவன் முகத்தை உருக்குலைய செய்தனர்.
 
சுதந்திர போராட்டத்தில் திருவாடனை பகுதி மக்கள் தீவிரமாக ஈடுபட்டனர். அதற்காக அவர்கள் பெற்ற துன்பமும் அதிகம். இப்பகுதியில் சுதந்திர போராட்டதிற்கு தலைமை வகித்தவர்கள் செல்லத்துரை, முனியப்பன், சிவஞானம் என்ற மூவர். இவர்கள் தலைமையில் திரண்ட மக்கள் கூட்டம், திருவாடனை சிறையை உடைத்து, சின்ன அண்ணாமலை போன்ற வீரர்களை விடுவித்தனர். அதன்பின் இப் போராட்ட கூட்டம் தேவக்கோட்டையை   நோக்கி சென்றது. அங்கு ஆங்கில அரசின் அலுவலகங்கள் அனைத்தும் அடித்து நொறுக்க பட்டன. செய்தி கேட்டு,  வால்ட் என்பவன் தலைமையில் வந்த போலிஸ், மக்களை நோக்கி கண் மூடித்தனமாக சுட்டது. அன்று அங்கு 50 பேர் இறந்தனர், 100 பேர் படுகாயமுற்றனர். நம்மால் மறக்கப்பட்ட தென்னாட்டு ஜாலியன்வாலாபாக் இது.  ஆங்கிலேயர்  சிவஞானத்தையும்,  முனியப்பனையும் சுட்டு கொன்றனர். செல்லத்துரை மட்டும் தப்பி ஓடி தலைமறைவானார். விடுமா ஆங்கிலேய அரசு. அவர் வீட்டை அடித்து நொறுக்கியது. அவருக்கு சொந்தமான நிலங்களில் பயிர்களை, மரங்களை அழித்தது. செல்லத்துரையின் தம்பியை பிடித்து, அவர் உடலில் கரும்புள்ளி, செம்புள்ளி குத்தி கழுதைமேல் ஊர்வலம் விட்டது. ஒரு சவர தொழிலாளியை அழைத்து அவருக்கு மொட்டை போட சொன்னது. மறுத்த அவரை தாக்கியது ஆங்கில அதிகாரவர்க்கம், அப்போதும் மறுத்த அந்த தொழிலாளி, அதே சவர கத்தியால் தன் கழுத்தை அறுத்து கொண்டார்.
 
 இப்பகுதியில் ஒரு   தேச பக்தரை தேடி அவர் வீட்டுக்கு போலிஸ் சென்றது. அவர் தலை மறைவாகி விட்டதால், அவர் மனைவி காளியம்மாளின் கையிலிருந்த குழந்தையை பிடுங்கி வீசினான், விசாரிக்க சென்ற “லவட் என்ற ஆங்கிலேயன். சத்தம் கேட்டு மக்கள் அங்கு வந்தனர். அதில் ஒருவனை அழைத்து அந்த பெண்ணின் சேலையை உருவ சொன்னான்.அவன் மறுத்தான்.அவனுக்கு  அடி கொடுத்தவுடன், அவன் தாங்க முடியாமல் அப பெண்ணின் சேலையை உருவினான். அடுத்து சேலையை உருவினவனையே அப் பெண்ணை கட்டி பிடிக்க சொன்னான் லவட். ஐயா அவள் என் தங்கை முறை என மறுத்தான்.மீண்டும் அவனுக்கு லத்தி அடி. அவன் அடி தாங்காமல் அதையும் செய்தான். அது மட்டுமல்ல அந்த பெண்ணையும் பருவம் அடையும் வயதில் இருந்த அவள்  மகளையும்  காவல் நிலையம் அழைத்து சென்று பல நாள் வைத்திருந்து கெடுத்தான். அந்த லவட் என்ற அயோக்கியன்.
 
ராமசாமி என்பவர் இப்பகுதி சுதந்திர போராட்ட வீரர். அவரை கைது செய்த அரசு, அதோடு விட்டு விடாமல், கமலாம்பாள், முனியம்மாள் என்ற அவரின் இரு மனைவிகளையும் காவல் நிலையம் அழைத்து வந்தது.  இளையவள் கையில் ஒரு விளக்குமாறு கொடுத்து, அதை சாணி கரைத்த தண்ணீரில் முக்கி, மூத்த மனைவியை அடிக்க சொன்னார்கள்.அவள் மறுக்க அவள் சேலையை உருவ போலிஸ் முற்பட்டது. அதைக்கண்ட மூத்தவள் தன்னை அடிக்குமாறு இளையவளை கேட்டு கொண்டாள். இளையவளும், சாணி கரைத்த விளக்குமாற்றால் மூத்தவளை அடித்தாள். சற்று நேரம் கழித்து, மூத்தவளிடம் அதேபோல் இளையவளை அடிக்க சொன்னார்கள். இருவரும் மாறி மாறி அடிப்பதைக் கண்டு சிரித்தனர், கண்ணியமற்ற ஆங்கிலேய அதிகாரிகள். அதன் பின் சில பெண்களை அடித்து அழைத்து வந்து, அவர்களை வெற்றிலை போட சொல்லி அதன் சாற்றை இருவர் மேலும் துப்ப சொன்னார்கள். பின் இருவரையும் அதே கோலத்தில் வீட்டிக்கு போகச் சொல்லி விரட்டினர்.
 
இன்னொரு  சுதந்திர போராட்ட வீரரின் குடும்ப பெண்களான சிட்டு, மீனா என்ற  இருவரையும் காவல் துறையினர் ஊர் பொது இடத்திற்கு அழைத்து வந்தனர்.  ஊர் மக்களையும்  மிரட்டி அழைத்து வந்து, அவர்கள் மத்தியில் இரு பெண்களையும் நிற்க வைத்தனர். கூட்டத்தில் ஒருவனை அடித்து அப் பெண்களின் சேலையை உருவச் செய்து, கட்டி அணைக்க வைத்தனர். அந்த மனிதனை அந்த பெண்களின் முதுகில் ஏறச் செய்து ஊரை சுற்ற செய்தனர்.
 
நாவலர் சோமசுந்தர பாரதியர்ர் என்பவர் ஆங்கிலேய அரசு பணியில் மாதம் அப்போது 1000 ரூபாய் சம்பளம் வாங்கி கொண்டிருந்தார். தூத்துக்குடியில் வ.உ.சி கப்பல் கம்பெனி ஆரம்பித்த உடன் நாட்டு பற்றால் தான் பார்த்த வேலையை ராஜினாமா செய்து கப்பல் கம்பெனியில் மாதம் 100 சம்பளத்திற்கு  மேலாளராக பணியாற்றினார்.
 
1927ல் பெல்காமில் காங்கிரஸ் மாநாடு நடந்தபோது சோமையாஜுலு என்ற மதுரை தேச பக்தர் சுதந்திர பிரசாரம் செய்து கொண்டு மதுரையிலிருந்து , பெல்காமிற்கு 700 கி.மீ. தூரம் நடந்தே சென்று மாநாட்டில் பங்கு பெற்றார். மாநாடு முடிந்தபின் அதே தூரம் சுதந்திர பிரசாரம் செய்து கொண்டே பெல்காமிலிருந்து நடந்தே  மதுரை வந்தார்.
 
பாகிஸ்தானின், வடமேற்கு எல்லை மாகாணத்தை சேர்ந்த ஜமீந்தார் ஒருவரின் மகன்  எல்லை காந்தி என அழைக்கப்பட்ட கான் அப்துல் காபர்கான். எல்லா வசதிகளோடும் வாழ வாய்ப்பு இருந்தும் , அவற்றை மறுத்து, தன்னைத்தானே எளிமையாக்கி கொண்டு  சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டார். அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியில் அவரை தலைவராக தேர்ந்தெடுக்க 1934 ல் சிலர் ஈடுபட்டபோது தொண்டனாகவே இருக்க விரும்புவதாக கூறி வந்த பதவியை மறுத்தார். தான் வாழ்ந்த வட மேற்கு மாகாணத்தை பாகிஸ்தானோடு சேர்க்க கூடாது , இந்தியாவோடுதான் சேர்க்க வேண்டும் என சொல்லியதால், பாகிஸ்தான் அரசால் 13 ஆண்டுகள் சிறையில் அடைக்க பெற்றார். சுதந்திரத்திற்குபின் இவருக்கு இந்தியாவின் உயர்ந்த விருதான பாரத ரத்னா விருது வழங்க பட்டது. இதற்காக இந்திய அரசு விமானத்தில் இவரை வரவழைத்தது. இவரை விமான நிலையத்திற்கு வரவேற்க போனவர்களுக்கு அதிர்ச்சி. ஏன் எனில் இவர் தன்னோடு கொண்டு வந்தது ஒரு மாற்று உடை மட்டுமே அவ்வளவு எளிமை. இப்போது இதை யாரிடம் தேடுவது.
 
ஆஷ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சாவடி அருணாசலத்தை, காவல் நிலைய மேஜையில் கையை விரித்து வைத்து கயிறால் கட்டி, இந்த கைதானே ஆங்கிலேயரை விரட்டுவோம் என தாளில் எழுதி ரத்த கையெழுத்து போட்டது எனக் கூறி, விடாமல் தொடர்ந்து லத்தியால் அடித்ததனர்.. அவர் கை எலும்புகள் அனைத்தும் நொறுங்கி கை முடமாகி விட்டது.
திருச்செந்தூர்-குலசேகரபட்டிணம் பகுதியில் மேகநாதன் என்பவர் தலைமையில் சுத்ந்திர போராட்டம் தீவிரமாக நடந்தது. பெற்றோர் தங்களது ஒரே பையனுக்கு பெண் பார்க்க முயலும் போது சுதந்திரம் வரும் வரை திருமணமே செய்ய மாட்டேன் என மேகநாதன் மறுத்து விட்டார்.சுதந்திரம் வந்தபோது, திருமண வயது கடந்து விட்டதால் திருமணமே செய்யவில்லை.
  
சுதந்திரத்திற்காக முகம் தெரியாத, முகவரி இல்லாத, பலர் உயிர் துறந்து உள்ளனர். பலர் சிறையில் கொடுமைகளை அனுபவித்துள்ளனர் .பலர் சொத்து, சுகம் பதவிகளை இழந்துள்ளனர்.வாழ வேண்டிய வயதில் இளைஞர்கள் பலர்  உயிரை இழந்துள்ளனர். பலர் தங்கள் இளம் வயதை சிறையில் கழித்து உள்ளனர்.தாய்மார்கள் தங்கள் பிள்ளைகளை இழந்துள்ளனர்.பெண்கள் தங்கள் கணவர்களை இளம் வயதில் இழந்துள்ளனர்.. ஆயிரக்கணக்கான பெண்கள் கற்பை இழந்துள்ளனர், அவமானபடுத்த பட்டுள்ளனர்.
 
இளைஞர்களே தெரிந்து கொள்ளுங்கள்
சுதந்திரம் ஒன்றும் சும்மா கிடைக்கவில்லை.

Saturday, August 10, 2013

அறிவின் முதிர்ச்சி

விவேகானந்தர் பேசி முடித்துவிட்டு மேடையில் இருந்து இறங்கி வந்தார்.

அவரால் வசீகரிக்கப் பட்டவளாய் அந்த அழகிய இளம்பெண் அருகில் வந்தாள்.

நீங்கள் என்னை மணந்து கொள்கிறீர்களா? என்று கேட்டாள்.

என்னைப் பார்த்ததும்
திடீரென்று ஏன் இந்த எண்ணம் வந்தது? என்று கேட்டார் ஸ்வாமிஜி.

அதற்கு அந்த பெண், உங்களைப் போலவே ஞானமும்,ஆற்றலும் நிரம்பிய மகனைப்
பெறவேண்டும் என விரும்பிகிறேன் எனவேதான் உங்களை மணக்க விரும்புகிறேன் என்றாள்.

அதற்கு ஸ்வாமிஜி உடனே சொன்னார்.என்னை மணந்து என்னைப்போலவே மகனை பெற்றுக்கொள்வதை விட
என்னையே மகனாக ஏற்றுக்கொண்டு விடேன்.

இன்று முதல் நான் உன்னை “தாயே” என்றே அழைக்கிறேன் என்று கூறினார்..

இதுதான் அறிவின் முதிர்ச்சி.....

ஒருவரது கருத்தை மறுதலிக்கும் பொழுதுகூட,அவரது மனத்தைக் காயப் படுத்தாமல்
மாறாக அவரை மகிழ்விக்கும் மாண்பு..

Friday, August 9, 2013

Actor Sathiyaraj - இப்படியும் ஒரு நடிகர்

ஷாருகான் நடிக்கும் இந்தி படத்தில் தமிழ் பேசும் நாயகியின்
தந்தையாக நடிக்க பெரும் தொகையுடன்
சத்யராஜை அணுகியிருக்கிறார்கள்.

அப்போது சத்யராஜ் போட்ட சில கண்டிஷன்கள்தான் அவர் மேல் இருந்த
மரியாதையை மேலும் பல மடங்கு உயர்த்தியது.

அதாவது ’ நான் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு இலங்கையில்
நடத்தப்படக்கூடாது .. நீங்கள்
அபடியே படப்பிடிப்பை அங்கு நடத்தினாலும் நான்
அங்கு வரமாட்டேன் ... படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகள் கூட
இலங்கையி நடத்தக்கூடாது .. தமிழ்
நாட்டையோ தமிழர்களையோ கிண்டல்
செய்வது மாதிரியோ இழிவு படுத்துவது மாதிரியோ காட்சிகள்
அமையக்கூடாது.. என்று பல கண்டிஷன்களைப்
போட்டதோடு அதை காண்டிராக்ட் அக்ரிமென்டிலும் சேர்க்கச்
சொல்லியிருகிறார் சத்யராஜ்.

தனக்காகவும் குடும்பத்திற்காகவும்
இனத்தையே காட்டிக்கொடுக்கும் நடிகர்கள் வாழும் நாட்டில்
இப்படியும் ஒரு நடிகர்

வாழ்த்துக்கள் - சத்யராஜ்.

Wife's tooth set மனைவியின் பல் செட்

இன்று ஒருவர் தன் மனைவியின் ஈறு பகுதி சிவந்து போய் இருக்கிறது பல்லும் கரையாக இருக்கிறது அதை சுத்தம் செய்யுங்கள் என்று அவர் மனைவியை என்னிடம் அழைத்து வந்தார்.

அவர் மனைவியிடம் சரி உட்காருங்கம்மா பல்லை சுத்தம் செய்யலாம் என்று சொன்னேன்.அந்தம்மா வாயை துணியால் மூடியபடி நான் சுத்தம் செய்துக்கமாட்டேன் எனக்கு வேண்டாம் என்று சொன்னார்.

வலி இருக்காதும்மா உட்காருங்க என்று அவரிடம் சொன்னேன்,அப்பவும் அமர மறுத்து விட்டார்.அவள் கணவர் கொஞ்சம் கோபமாக அமர சொல்லி வற்புறுத்திய பிறகு ’சரி நீங்கள் வெளியே உட்காருங்கள் நான் சுத்தம் செய்து கொள்கிறேன்’ என்று தன் கணவரிடம் சொன்னார்.

என் வழி தனி வழி ( இது நிரா வழி ) - ஸ்ரீதர்

ஸ்ரீதர் (1933 - அக்டோபர் 20, 2008) - தமிழ் சினிமாவின் இணையற்ற இயக்குனர்களில் மிகவும் முக்கியமானவர்.இயக்கத்திலும்,வச
னத்திலும் தனக்கென தனி முத்திரை பதித்த சினிமா மாமேதை.தமிழ் சினிமா மட்டுமல்லாது கன்னடம்,தெலுங்கு,ஹிந்தி என வேரூன்றி கிளை பரப்பி வெற்றி கண்டவர்.

வசனங்களால் நிறைந்த சினிமாவை காட்சிகளாய் வளர்த்து விருட்சமாக்கியவர்.காட்சிகளிலும்,காமிராக் கோணங்களும் கதை சொல்ல ஆரம்பித்தது இவர் காலத்திற்கு பின்தான்.

Thursday, August 8, 2013

கொஞ்ச நாளாவது வாழ்க்கையை அனுவிப்போமே!

கொஞ்ச
நாளாவது வாழ்க்கையை அனுவிப்போமே!

போதுமென்ற மனம் என்பதுதான் மனித வாழ்வில்
சென்றடைய முடியாத எல்லை.

போதுமென்ற
மனமே ஒருவர் எளிமையான
வாழ்க்கை வாழ்கின்றாரா இல்லையா என்பதற்கான
சான்று.

சும்மா வாழ்க்கையை ஆட்டோ பைலட்டில்
போட்டுவிட்டு என்ன வாழ்க்கை வாழ்கிறோம்
என்று சலித்துக்கொள்வதைவிட,
ஆட்டோபைலட்டிலிர
ுந்து மாற்றி நம்கைக்கு கொண்டு வந்து வாழ்ந்து
நாம் எடுத்த பிறவியை வாழ்ந்து முடித்தோம்
என்றிருக்கும்.

எனக்கு ஒரு பெரிய கார் வேண்டும், என் மகன்
டாக்டராகணும், எனக்குப் புரொமோஷன்
வேணும், எனக்கு ஒரு லவ்வர் வேண்டும்
என்று எதிர்காலத்தைப்
பற்றியே கவலைப்பட்டுத் திரியாமல்
இன்று ஓட்டும் பைக்கை ரசித்து ஓட்டியும்,
ஆசை மகனுடன் நீண்ட நேரம் விளையாடியும்/
ஊரைச் சுற்றிக் காண்பித்தும், பார்க்கும்
வேலையை ரசித்து சிறப்பாகச் செய்தும்,
தன்னை விரும்பும் தாய் & தந்தை & அண்ணன்
& தம்பி உறவை பலப்படுத்தியும் வாழ்வதுதான்
எளிமையாய் வாழ்வது.

ஏக்கத்துடனேயே திரிவது எளிமையான
வாழ்க்கை இல்லை.

உணவு, உடை, வீடு என்பவை மனிதன் உயிர்
வாழ்வதற்கு அத்தியாவசியத் தேவை.

அதேபோல் சம்பாத்தியத்திற்கு ஒரு வேலையும்
முக்கியம் என்றாலும், இவை எல்லாவற்றிலும்
எது குறைந்தபட்சம், எது அதிகபட்சம்,
நமக்கு எது நமக்கு சரி என்பதைத்
தீர்மானிப்பதில்தான் எளிமை இருக்கிறது.

எவ்வளவு பிசியாக இருக்கிறீர்கள் என்பதல்ல
முக்கியம்! எதில் பிசியாக இருக்கிறீர்கள்
என்பதுதான் மிக முக்கியம்.

எளிமையான வாழ்க்கை வாழவேண்டும் என்றால்
நம்முடைய நேரத்தை நாம் சரிவர
பயன்படுத்தவேண்டும். முடியாத
வேலைகளை இழுத்துப்
போட்டுக்கொண்டு செய்கிறேன்
பேர்வழி என்று தொடர்ந்து ஆபீஸையே கட்டிக்க
வாழ்க்கைக்கு முதல் எதிரி.

என்றைக்கெல்லாம்
ஒன்பது மணிக்கு ஆபீஸில் நுழைந்த நீங்கள்
இரவு ஏழு மணிக்கு மேல் அலுவலகத்தில்
இருக்கிறீர்களோ அன்றைக்கெல்லாம் எதற்காக
இப்படி இருக்கிறோம் என்று சற்று சிந்தியுங்கள்.

வீட்டில் சிறு தோட்டம் போடவேண்டும்
என்று ஆசை!
அதற்கு நேரமே இல்லை என்று சொல்பவர்கள்
எதற்காக புதிது புதிதாய்
வேலைகளை ஏற்றுக்கொள்கின்றனர்?

எதிர்காலத்தில் முன்னேற உதவும்
என்று நினைத்துக்கொண்டு சனி, ஞாயிறுகளில்
மட்டுமே நடக்கும் புதிது புதிதான
வகுப்புகளில் சேர்ந்துகொண்டு பின்னர் ஏன்
அலுத்துக்கொள்கின்றனர்?.

அது எப்படி சாத்தியம்! வாழ்க்கையில் முன்னேற
வேண்டாமா? பணம் சம்பாதிக்க வேண்டாமா?
தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டாமா?
என்று கேட்பவர்களுக்கு நிறைய வேலை செய்ய
வேண்டாம் என்று நினைத்தீர்கள் என்றால்
செலவைச் சுருக்கிக்கொள்ளுங்கள்.

செலவு குறைந்தால் நிறையப் பணம்
தேவைப்படாது! வேலையும் குறையும்.

உங்களுக்குப் பிடித்த விஷயத்தைச் செய்ய
நேரமும் கிடைக்கும். கொஞ்சம் வாழவும்
செய்யலாம்

Wednesday, August 7, 2013

சேரன் மகள் காதல் - தனிப்பட்ட குடும்ப விவகாரம்

பேஸ்புக்கில் இலவசமாக கிறுக்க முடிகிறது என்பதற்காக ஆல் இன் ஆல் அழகு ராஜா போல சமூகத்தில் நடக்கும் எல்லா சம்பவங்கள் குறித்தும் கருத்து சொல்ல வேண்டாம் என்று தவிர்ப்பது உண்டு. சேரன் மகள் காதல் விவகாரத்தையும் அப்படியே தவிர்த்தேன். ஏனெனில் சேரன் சாதி அல்லது வர்க்க வேறுபாட்டால் மகளின் காதலை எதிர்க்கவில்லை. தன் மகளை கரம் பிடிக்க விரும்புவனின் தகுதி, நடத்தை குறித்தான அச்சம் அது என்று அதை குறிப்பிட்டு இருந்தார். நம் சமூகத்தில் வாழும் பெரும்பாலான நமது தந்தைகள் அல்லது பெற்றோர்களின் நியாயமான கவலை இது என்பதால், அது அவர்களின் தனிப்பட்ட குடும்ப விவகாரம் என்றே எண்ணினேன்.

Popular Posts